தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணா நகர் , ஐடி காரிடர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

அண்ணா நகர்:

எம்எம்டிஏ காலனி கமலா நேரு நகர், சிட்கோ அசோக் நகர், அரும்பாக்கம், மேத்தா நகர், ரயில்வே காலனி, கலெக்ட்ரேட் காலனி, சூளைமேடு சக்தி நகர், நெல்சன் மாணிக்கம் சாலை, கிழக்கே கோடம்பாக்கம் பஜனை கோயில் தெரு, அழகிரி நகர், தமிழர் வீதி மற்றும் இளங்கோஅடிகாளர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். 

ஐடி காரிடார்:

துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம், பிள்ளையார் கோயில் தெரு, ஒக்கியம் பேட்டை, கண்ணகி நகர், டிஎன்எஸ்சிபி சேரி மொத்தப் பகுதி, காரப்பாக்கம், ரிவர் வியூ காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். 

பெரம்பூர்:

காந்தி நகர், பின்னி நகர் பிரதான சாலை, வெங்கடேஸ்வரா காலனி 1, 2 தெரு, கட்டபொம்மன் 9வது தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.