தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

போரூர்:

திருமுடிவாக்கம் குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, பழந்தண்டலம், சோமங்கலம், வரதராஜபுரம், பெரியார் நகர், வழுதாளம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

அம்பத்தூர்:

நொளம்பூர் NNS HIG MIG, அடையாலம்பேட்டை, முகப்பேர் மேற்கு, ராஜன் குப்பம், ஜெஸ்வந்த் நகர், வெள்ளாளர் தெரு, கங்கை அம்மன் நகர், கீழ் அயனம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.