சென்னை மதுரவாயல் கிருஷ்ணாபுரம் 3வது பிரதான சாலை, 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகேஸ்வர் (34). கடலூரை சேர்ந்த இவர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவராக வேலை செய்து வந்தார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். நந்தினியும் மருத்துவராக வேலை செய்து வருகிறார். கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் உடலில் தனக்கு தானே விஷ ஊசி செலுத்தி கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னை மதுரவாயல் கிருஷ்ணாபுரம் 3வது பிரதான சாலை, 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகேஸ்வர் (34). கடலூரை சேர்ந்த இவர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவராக வேலை செய்து வந்தார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். நந்தினியும் மருத்துவராக வேலை செய்து வருகிறார். கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

டாக்டர் மகேஸ்வர் வழக்கம் போல் நேற்று முன்தினம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். அறுவை சிகிச்சை முடிந்து மாலை 6.15 மணிக்கு தனது காரில் மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இந்நிலையில், மருத்துவர் மகேஸ்வர் பணிக்கு வராத காரணத்தால் அவரது நண்பர் அவருக்கு போன் செய்தும் எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது கார் ஓட்டுநரை தொடர்பு கொண்டு கேட்ட போது அதற்கு அவர், மருத்துவர் மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருப்பதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து பதறிக்கொண்டு நண்பர் நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்தார். அவரது தங்கிய அறையில் கதவை பல முறை தட்டியும் திறக்கவில்லை. இதனையடுத்து, ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் மருத்துவர் வினோத் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மகேஸ்வர் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மருத்துவர் மகேஸ்வர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அவர் தற்கொலை செய்து கொண்ட அறையை சோதனையிட்ட போது அவர் விஷம் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். மேலும், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதெனும் காரணமாக என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.