சென்னையில் ஷாக்கிங் நியூஸ்.. ரோஸ் மில்க் வாங்கி குடித்த சிறுவன் திடீரென உயிரிழப்பு?

சென்னை கண்ணகி நகர் ஓக்கியம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இவர்களது 2வது மகன் வசந்தகுமார்(11) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள பார்கில் விளையாடிவிட்டு வீடு திரும்பியபோது கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்துள்ளார்.

Boy dies after drinking Rose Milk in chennai

சென்னையில் மளிகை கடையில் ரோஸ் மில்க் வாங்கி குடித்த 11 வயது சிறுவன் சாலையில் தள்ளாடிக்கொண்டே வந்து வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணகி நகர் ஓக்கியம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இவர்களது 2வது மகன் வசந்தகுமார்(11) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள பார்கில் விளையாடிவிட்டு வீடு திரும்பியபோது கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்துள்ளார்.

Boy dies after drinking Rose Milk in chennai

பின்னர், வீட்டுக்கு சென்ற சிறுவன் திடீரென மயக்கமடைந்து  விழுந்துள்ளார். உடனே அலறி துடித்த தாய் திவ்யா தனது மகனிடம் என்ன ஆச்சு என கேட்ட போது ரோஸ் மில்க் வாங்கி குடித்ததிலிருந்து வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே  உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Boy dies after drinking Rose Milk in chennai

இதுதெதாடர்பாக கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவன் வசந்தகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரோஸ் மில்க் குடித்ததால் சிறுவன் உயிரிழந்தாரா? அல்லது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும். மேலும், ரோஸ் மில்க்கின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரோஸ் மில்க் குடித்ததால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios