கரண்ட் இல்லை.. எமெர்ஜென்சி பிளாஷ்பேக்.. திமுகவுக்கு முடிவு - பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அதிரடி!

தமிழ்நாட்டிற்கு இன்று மிகவும் மோசமான தலைமை உள்ளது. திமுக தலைமைக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இல்லை என்று ஜே.பி நட்டா பேசியுள்ளார்.

bjp president jp nadda speech against dmk mk stalin at chennai meeting-rag

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையில் கலந்துகொள்வதற்காக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சென்னை இன்று வந்தார். துறைமுகத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ஜே.பி. நட்டா, “தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களின் இதயத்தில் உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் மனதில் தமிழகம் மிகவும் நெருக்கமாக உள்ளது. பிரதமர் மோடி உலகின் எந்த பகுதிக்கு சென்று உரையாற்றினாலும் தமிழ் மொழி, தமிழ் புலவர் பற்றி பேசி வருகிறார். 

ஜே.பி நட்டா பேச்சு 

தமிழகத்தின் பெருமையான செங்கோலை நாடாளுமன்றத்தில் நீதி, நேர்மை, சிறந்த ஆட்சிக்கான அடையாளமாக பிரதமர் மோடி மாற்றி உள்ளார். இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாடாளுமன்றத்திற்குள் நுழையும்போது செங்கோல் கொண்டு செல்லப்பட்டது நமக்குக் கிடைத்த பெருமையாகும். தமிழ்நாட்டின் மைந்தன் எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பிரதமர் மோடி பாரத ரத்னா விருது அறிவித்துள்ளார். 

தமிழ்நாட்டின் சிறப்புகள்

தமிழ்நாடு மிகச்சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டது. தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். கலை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு மிகப்பெரிய பங்களித்துள்ளது. தமிழ்நாடு என்றால் கலாசாரம், பண்பாடு, பழமையான மொழி குறித்து பெருமை கொள்கிறோம். தமிழ்நாட்டின் சாதுக்கள், சன்னியாசிகள், தலைவர்கள் பற்றி பெருமை கொள்கிறோம். 

திமுக தலைமை

தமிழர்கள் கடும் உழைப்பாளிகள். ஆனால் இத்தனை சிறப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு இன்று மிகவும் மோசமான தலைமை உள்ளது. திமுக தலைமையில் இங்கு மிகவும் மோசமான ஆட்சி நடந்து வருகிறது. திமுக தலைமைக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இல்லை. இன்று நான் வரும் வழியில் மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன.

முதல்வர் மு.க ஸ்டாலின்

அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இது எனக்கு எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்தியது. இதுதான் ஜனநாயகமா? இதுதான் தமிழகத்தின் கலாச்சாரமா? இது தமிழகத்தின் கலாச்சாரம் இல்லை என்றால், இத்தகைய நபர்கள் தமிழகத்திற்கு தலைவர்களாக இருக்கக் கூடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களை வெளியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. தி.மு.க.வின் விளக்குகள் அணைக்கப்படும் நேரம் விரைவில் வரும்” என்று  ஜே.பி நட்டா பேசினார்.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios