சென்னையில் இருசக்கரம் வாகனம் மீது மினிவேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் மனைவி கண்ணெதிரே ரத்த வெள்ளத்தில் கணவர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் இருசக்கரம் வாகனம் மீது மினிவேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் மனைவி கண்ணெதிரே ரத்த வெள்ளத்தில் கணவர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை தரமணி அன்பழகன் நகர் கருமாரியம்மன் கோயில் தெரவைச் சேர்ந்தவர் துரைவேல்(65), இவரது மனைவி ருக்மணி (55) . இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் ராஜூவ்காந்தி சாலை வழியாக டைடல் பார்க் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். இவர்களது இருசக்கர வாகனம் அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த வேன் அந்த சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கிண்டியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மீது மோதிய வேகத்தில், இருசக்கர வாகனம் மீது மோதியது. 

இதில், நடந்து சென்ற சந்திரசேகர் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். ஆனால், இருசக்கரம் வாகனத்தை ஓட்டி வந்த துரைவேலு மனைவியின் கண்ணெதிரெ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயமடைந்த ருக்மணி பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதேபோல் படுகாயமடைந்த சந்திரசேகர் சிகிச்சைக்காக ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த துரைவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.