தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவில் தலைவிரித்தாடிய கொரோனா தொற்றின் கோரதாண்டவம் கடந்த டிசம்பர் மாதம் முதல் கட்டுக்குள் வர ஆரம்பித்தது. இதையடுத்து நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி பணி தொடக்கப்பட்டு, முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 60-வயதைக் கடந்தவர்களுக்கும், இணைநோய்கள் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள் தவிர மற்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் நுழைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கறிஞர்கள் அறை மீண்டும் மூடப்பட வேண்டும் என்று பதிவாளர் அறிக்கை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வரும் 8ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் அறை மூடப்படுவதால் தங்களுடைய பணிகள் பாதிக்கப்படும் எனக்கூறி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
