சென்னையில் பயங்கரம்.. போலீஸ் மீது மோதி நிற்காமல் சென்ற ஆட்டோ.. வெளியான பகீர் வீடியோ.!

கடந்த 3ம் தேதி நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

auto collided with the police and went off without stopping in chennai

சென்னை நந்தம்பாக்கத்தில் ஆட்டோ ஒன்று காவல் உதவி ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வாகன சோதனை

கடந்த 3ம் தேதி நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

auto collided with the police and went off without stopping in chennai

போலீஸ் மீது மோதிய ஆட்டோ

அப்போது, அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு அதிகவேகமாக வந்த ஆட்டோ ஒன்றை ஓரமாக நிறுத்துமாறு உதவி ஆய்வாளர் பொன்ராஜ் சைகை காட்டினார். ஆனால், வேகத்தை குறைக்காமல் வந்த ஆட்டோ காவல் உதவி ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த பொன்ராஜ் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பினார்.

 "

சிசிடிவி காட்சிகள்

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜை ஆட்டோ வேகமாக மோதிவிட்டு தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios