சென்னையை சேர்ந்த மகள், தந்தை, தாய் ஆகியோர் உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை சேர்ந்த மகள், தந்தை, தாய் ஆகியோர் உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தியாவில் கொரோனா 2அலை சுனாமி வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சென்னையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம், இவரது மகளுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானது. இவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த ஏப்ரல் 20ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகளுக்கு தந்தை ராமலிங்கம் இறுதிச் சடங்கை நடத்தினார். 

அடுத்த சில நாட்களில், ராமலிங்கத்திற்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இம்மாதம் முதல் வாரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு, இவரது மனைவி வனிதா இறுதிச் சடங்கை செய்து வைத்தார். அதற்கடுத்த சில நாட்களில், ராமலிங்கத்தின் மனைவி வனிதாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

யாருடைய ஆதரவும் இல்லாததால், வீட்டுத் தனிமையில் இருந்தார். ஆனால், கொரோனாவின் தீவிரம் அவருக்கு அதிகமானதால், அவரும் கடந்த புதன்கிழமை அவரும் உயிரிழந்தார். இவருக்கு இறுதிச்சடங்கை ஆர்.டபிள்யூ.ஏ தலைவர் மற்றும் அவரது நண்பர் செய்தனர். சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 3 பேர் அடுத்தடுத்து கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.