சென்னை மெரினா கடற்கரை அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அன்றாடம் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் ஆங்காங்கே அரங்கேறிக் வருகிறது.  இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும்,  இது தொடர்பான அவலங்கள் ஓய்ந்தபாடில்லை. 

சிறுமிகளின் ஆபாச படங்களை பார்பவர்களின் எண்ணிக்கையில் சென்னை நகரம் முதலிடத்தில் இருக்கிறது  என தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் அத்தகவலை உறுதி செய்வதாக உள்ளது. இந்நிலையில் திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையம் அருகில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்தது . அதனையடுத்து தகவல் அறிந்து  அண்ணாசதுக்கம் போலீசார் சம்பவ இடத்தை நேரில் கண்காணித்தனர்.  அப்போது அப்பகுதியில் சிறுமியுடன்  சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்ததில், அந்த சிறுமிக்கு 15 வயது என்றும், அந்த சிறுமியை அந்நபர் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது 

அத்துடன் அந்த நபர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது அந்த நபர் விருதாச்சலத்தைச் சேர்ந்த அன்பழகன்( வயது 25) என்பதும் தெரியவந்தது .  சிறுமியை பொது இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை  செய்ததுடன் .  பாலியல் தொழில் ஈடுபட்டதாகவும் அவர் மீதான வழக்குகள் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.