மனைவி கணவனின் எந்த பக்கத்தில் தூங்க வேண்டும் தெரியுமா? வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?

மனைவி கணவனின் எந்த பக்கத்தில் தூங்குவது நல்லது? இது குறித்து வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது என்று இங்கு காணலாம்....

wife should sleep on which side of husband

கணவன்-மனைவி உறவில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று ஒவ்வொரு தம்பதியினரும் விரும்புகிறார்கள். உறவை வலுப்படுத்த அவர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறார்கள். சில சமயங்களில் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் மற்றும் எவ்வளவுதான் ஒத்துப்போக முடிவு செய்தாலும், உங்களால் உறவைக் காப்பாற்ற முடியாது. ஒரு சிறிய பிரச்சனை பெரிதளவில் சண்டையை கிளப்பி விவாகரத்து வரை கொண்டு செல்கிறது. எனவே, திருமண வாழ்வில் மகிழ்ச்சியைப் பெற வாஸ்து மற்றும் ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 

பல சமயங்களில் வாஸ்து தோஷம் ஏற்பட்டாலோ அல்லது தர்ம (மதம்) சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றாவிட்டாலோ, நாம் எவ்வளவு முயன்றாலும் நம்மால் அந்த உறவை தக்க வைத்து கொள்ள முடியாது. தாம்பத்ய மகிழ்ச்சி மட்டுமல்ல, கணவனின் ஆரோக்கியம் பெண்கள் செய்யும் சில வேலைகளைப் பொறுத்தது. 

சாஸ்திரங்களில், கணவன்-மனைவியின் உறவில் அவர்களது படுக்கையறை எப்படி இருக்க வேண்டும், அதில் என்னென்ன இருக்கக்கூடாது என்பது. மேலும் சாஸ்திரம் படி, படுக்கையறையில் மின்சாதனங்கள் இருக்கக் கூடாது, இரட்டைக் கட்டில் போடக் கூடாது, இரட்டைக் கட்டிலில் தம்பதிகள் படுக்கக் கூடாது, கிழிந்த படுக்கை விரிப்பைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இவை எல்லாவற்றிலும் கணவன்-மனைவி எப்படி உறங்க வேண்டும் என்பது தான் முக்கியம் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜோதிட சாஸ்திரப்படி,  மனைவி கணவனின் இடது பக்கத்தில் தான் தூங்க வேண்டும். இதற்கு சாஸ்திரங்களில் பல்வேறு காரணங்கள் உள்ளன. 

சிவன் அர்த்தநாரேஷ்வரரின் வடிவத்தைத் தொட்டபோது,   பெண் உறுப்பு அதாவது அன்னை பார்வதி அவரது இடது மூட்டிலிருந்து வெளிப்பட்டார். இதனால் சிவனின் இடது பக்கம் பார்வதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் ஆணின் இடது பக்கம் பெண்ணின் பக்கமாக கருதப்படுகிறது. அதனால்தான் சுப காரியங்களில் மனைவி கணவனின் இடது பக்கம் உட்கார வேண்டும் என்பார்கள். அதே போல தூங்கும் போது மனைவி கணவனின் இடது பக்கத்தில் தான் தூங்க வேண்டும். 

கணவனின் இடது பக்கம் தூங்குவதால் பலன் என்ன? : 

மனைவி கணவனின் இடது பக்கத்தில் தூங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு இருக்கும். ஒரு பெண் தன் கணவனின் இடது பக்கம் உறங்குவது அவளின் கணவனுக்கு உகந்தது. இதனால் அவளது கணவன் பாதுகாக்கப்படுவான்.

சத்யவானைக் கொல்வதற்காக யமராஜா இடது பக்கத்திலிருந்து வந்ததாகத் சொல்லப்படுகிறது. அப்போது சாவித்திரி தன் கணவனைக் யமராஜாவினடத்தில் இருந்து
காப்பாற்றினாள். எனவே இடது பக்கம் தூங்குவது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இடது பக்கம் உறங்கும் மனைவி கணவனை யமராஜாவிடம் இருந்து காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: உங்கள் மனைவியின் கையில் இந்த ரேகை இருந்தா நீங்கள் பிரிவது நிச்சயம்..!!

அதுமட்டுமின்றி, கன்யாதானம், திருமணம், யாகம், ஜாதகர்மம், நாமகரணம், அன்ன ப்ராசனம் ஆகியவற்றின் போது மனைவி கணவனின் வலது பக்கத்தில் அமர வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. லௌகீக வேலையில், மனைவி கணவனின் இடது பக்கத்தில் இருப்பாள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இச்சமயத்தில் பெண்களே முதன்மையானவர்களாகக் கருதப்படுவதோடு, பெண் உறுப்பு உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

யாகம், கன்யாதானம், திருமணம், இந்த வேலைகள் அனைத்தும் ஆழ்நிலை என்று கருதப்படுகிறது. இவற்றில் ஆணுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் மனைவி கணவனின் வலது பக்கத்தில் அமர வேண்டும். இது மங்களகரமானது என்று கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios