Reason Behind Flag Hoisted in Temple Festivals : கோயில் திருவிழாக்களில் கொடியேற்றுவது என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அதன் பின்னணியில் மிக ஆழமான ஆன்மீக மற்றும் அறிவியல் தத்துவங்கள் உள்ளன. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கொடியேற்றத்தின் வரலாறு:
கொடி என்பது ஆட்சி அதிகாரத்தைக் குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்த நாட்டை பிடித்தால், அங்கு தனது அதிகாரம் வந்து விட்டதை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதேபோன்றுதான், திருவிழா நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்தவே கோயில்களில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது.
கொடி ஏற்றும் முறை:
கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவா கனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள். கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு சக்தி, கொடித் துணி ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை வெளிக்காட்டுகிறது.
ஒவ்வொரு ஊரிலும் அமைந்துள்ள கோயில்களில் முறையாகப் பராமரிப்பதும், அந்த கோயில்களில் ஒவ்வொரு நாளும் தவறாது பூஜைகள் நடைபெறம்வருடா வருடம் திருவிழாக்கள் நடத்தப்படுவதும். அந்த ஊர் எல்லைக்குட்பட்ட மனிதர்கள் நன்மையை ஏற்படுத்தும் வகையில் மழை பெறுவதற்காகவும் தீய சக்தியில் இருந்து விடுபடுவதற்காகவும் அந்த காலத்தில் திருவிழா என்று ஒன்று உருவாக்கப்பட்டது . ஆகவே, ஒவ்வொரு ஊரிலும் வசிக்கும் மக்கள், தனது ஊர், தங்கள் கோயில் என்னும் சொந்த உணர்வுடன், ஈடுபாட்டுடன் இவற்றைச் செய்ய வேண்டும்.அதற்காகத்தான் திருவிழா துவங்கும் நாளன்று கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அவ்வூரிலுள்ள மக்கள் சார்பாக அவ்வூரிலுள்ள பெரியோர் கையில் காப்பு என்னும் கயிற்றைக் கட்டிவிடுவார்கள். அனைத்து மக்களும் அந்த திருவிழாவிற்கு ஒப்புதல் அளித்து சுத்தபத்தமாக அந்த திருவிழாவை நிவர்த்தி செய்வார்கள். கொடி ஏற்றத்தின் மூலமே கோயில்களில் திருவிழா நடைபெற போகிறது என்று அனைவருக்கும் தெரியும் இதுவே முதல் அடித்தளமாகவும் இருக்கிறது முக்கிய காரணமாகவும் அமைகிறது.
கொடி சின்னங்கள்:
கொடி பொதுவாக அந்த மூலவருக்கு ஏற்ற வாகனமே சின்னமாக அமைந்திருக்கும். ஆகவே கொடி மர உச்சியில் இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது. சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும்.
கொடியேற்றத்தின் நன்மைகள்:
திருவிழா என்றால் கொடியேற்றம் இருக்கும். கோயில் கும்பாபிஷேகம் என்றால் கொடியேற்றம் இருக்கும் ஆகவே ஒரு சுப காரியங்கள் நடக்கும் போதே அந்த குடியேற்றங்கள் நடைபெறுகிறது அந்த கொடியேற்றத்தின் மூலம் மக்கள் மன அமைதியும் மன மகிழ்ச்சியும் சுற்றமும் சுலபம் வந்து பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள் அது மட்டும் அல்லாமல் வீடு சுத்தமாகவும் அமைந்திருக்கும் அது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அசைவம் எதுவும் சாப்பிடாமல் காய்கறிகளை மட்டும் சாப்பிடுவது உடல் உணவு உடல் முழுவதும் சத்துக்கள் இருந்ததாகவே காணப்படும் அதனால் உடல் நலத்திற்கு நலமாக அமைகிறது. அதன் பிறகு திருவிழா நடைபெறும்போது மிகவும் ஆரவாராகவும், பக்தியும் கடவுள் அனைவரையும் பெற்று நலமுடன் இருப்பார்கள்.
