கேதார கௌரி விரதம் கடைபிடிக்கும் வழிகளும், வரலாறும்..
இறைவனை வழிபடவும், அனுஷ்டிக்கவும் பல விரதங்கள் இருந்தாலும், அதில் முதலானதாகவும், முக்கியமானதாகவும் இருப்பது கேதார கௌரி விரதம் தான். அனைத்து நலன்களையும் பெறுவதோடு, அனைத்து செல்வங்களும் சேர்ந்து, அவை நிலைத்து நிற்கவும் செய்யும் விரதம் இது. பெரிய நோன்பாக இந்த கேதார கெளரி விரதமும் சிறிய நோன்பாக வரலஷ்மி விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த கேதார கெளரி விரதம் உருவான வரலாறு குறித்து தெரிந்துகொள்வோம்.
அனைவரும் நிக்காமல் ஓடி ஓடி உழைத்து கொண்டிருக்கும் சமயத்தில் நிதானித்து நித்தய வழிபாடு மேற்கொள்ள யாருக்கும் நேரமில்லை என்பதை விட, நினைவிலே இருப்பதில்லை. ஞானிகள் போன்று நம்மால் சதா இறைவனை நினைத்து தியானிக்க முடியாது என்பதாலே, வழிபடுவதற்கு ஏற்ற நாட்கள் தனியாக குறிக்கப்பட்டு, அதற்கென வழிபாட்டு முறைகளை உருவாக்கி அவை சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. இப்படி முன்னோர்கள் முதற்கொண்டு அனைவரும் கடைபிடித்து வரும் உபாயங்களே விரதங்கள்.
உருவான வரலாறு..
சிவபக்தரான பிருங்கி முனிவர் எப்போதும் சிவலிங்க பூஜை செய்து வருவதில் தனது கவனத்தை செலுத்தி வந்தார். அப்போது பார்வதி தேவிக்கு முனிவர் மீது வருத்தம் ஏற்பட்டது. தனது கணவரை இப்படி சதா நினைத்து வழிபட்டு வருவதில் தேவிக்கு மகிழ்ச்சி என்றாலும், சக்தியாகிய நம்மை வழிபட வில்லையே என்ற வருத்தம் தான் அது.
பூமிக்கு வந்த தேவி, சிவம் வேறு சக்தி வேறு அல்ல என்பதை மக்களுக்கு உணர்த்த விரும்பினார். அப்போது கௌதம மகரிஷி ஆஸ்ரமத்தை அடைந்து, என்னுடைய விருப்பம் நிறைவேற வேண்டும் என்று கௌதமரிடம் வழி கேட்டாள். அப்போது அவர் கொடுத்த ஒரு உபதேசம் தான் விரத பூஜை.
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் என்றால் என்ன தெரியுமா?
தேவியும் கௌதம மகரிஷியின் உபதேசம் படி, விரதத்தை மேற்கொண்டாள். பூஜையிலேயே நாட்களை கடத்தினாள். தேவியின் விரதத்தை கண்டு, மனம் மகிழ்ந்த சிவபெருமான் பூமிக்கு வந்து காட்சியளித்தார். மேலும், அவரின் திருமேனியில் இடபாகமும் தந்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார். தேவி கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம். இதைத்தான் கேதார கௌரி விரதம் என்றும் போற்றுவார்கள்.
கடைபிடிக்கும் வழிகள்..
கேதார கௌரி விரதமானது 21 நாள்கள் கடைபிடிக்கப்படும். அதாவது புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் தொடங்கி, ஐப்பசி அமாவாசையான தீபாவளி நாள் வரை கடைபிடிக்கப்பகிடுகிறது. ஒருவேளை 21 நாள்களும் விரதம் மேற்கொள்ள முடியாது என்பவர்கள் 14 நாள்கள் செய்வது நல்லது. பௌர்ணமிக்குப் பின்னர் வரும் பிரதமை முதல் தொடங்கி அமாவாசை வரை இருக்கலாம். இதுவும் கடினம் என்று நினைப்பவர்கள் இந்த விரதத்தை தீபாவளி அன்று மேற்கொள்ளலாம்.
தேய்பிறை அஷ்டமி : அஷ்ட பைரவர் வழிபாடு செய்யுங்கள்! கஷ்டங்கள் நீங்கும்!
மேலும், விரத நாளில், விநாயகரை வழிபட்டு, பிருங்கி மற்றும் கௌதம முனிவர்களை வணங்கி சிவபூஜையைத் துவங்க வேண்டும். 14 அல்லது 7 என்கிற எண்ணிக்கையிலான மலர்கள், வில்வ இலைகள் வைத்து சிவபெருமானை வழிபட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சிவாய நம: ப்ரதமக்ரந்திம் பூஜயாமி
வாஹாய நம: த்விதீயக்ரந்திம் பூஜயாமி
மஹாதேவாய நம: த்ருதீயக்ரந்திம் பூஜயாமி
வ்ருஷபத்வஜாய நம: சதுர்த்தக்ரந்திம் பூஜயாமி
கௌரீசாய நம: பஞ்சமக்ரந்திம் பூஜயாமி
ருத்ராய நம: ஷஷ்டக்ரந்திம் பூஜயாமி
பசுபதயே நம: ஸப்தமக்ரந்திம் பூஜயாமி
பீமாய நம: அஷ்டமக்ரந்திம் பூஜயாமி
த்ரியம்பகாய நம: நவமக்ரந்திம் பூஜயாமி
நீலலோஹிதாய நம: தசமக்ரந்திம் பூஜயாமி
ஹராயே நம: ஏகாதசக்ரந்திம் பூஜயாமி
ஸ்மர ஹராய நம: த்வாதசக்ரந்திம் பூஜயாமி
பவாய நம: த்ரயோதசக்ரந்திம் பூஜயாமி
சம்பவே நம: சதுர்தசக்ரந்திம் பூஜயாமி
சர்வாய நம: பஞ்சதசக்ரந்திம் பூஜயாமி
ஸதாசிவாய நம: ஷோடசக்ரந்திம் பூஜயாமி
ஈச்வராய நம: ஸப்ததசக்ரந்திம் பூஜயாமி
உக்ராய நம: அஷ்டாதசக்ரந்திம் பூஜயாமி
ஸ்ரீகண்ட்டாய நம: ஏகோநவிம்சக்ரந்திம் பூஜயாமி
நீலகண்ட்டாய நம: விம்சதிதமக்ரந்திம் பூஜயாமி
கேதாரேச்வராய நம: ஏகவிம்சதிதமக்ரந்திம் பூஜயாமி
கேதாரேச்வராய நம: நாநாநாவித பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி
21 நாட்கள் விரத வேளையில் இந்த 21 மந்திரங்களை உச்சரிப்பது விரதத்திற்கு மேலும் வலு சேர்க்கும்.