Tirumala Tirupati: திருப்பதியில் இந்த 2 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து! தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு.!
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி கோவிலில் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் இரண்டு நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை மட்டும் வார இறுதி நாட்களில் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு கூட்டம் அலைமோதும். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய உணவு உள்ளிட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளை கோவில் தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரூ.300 கட்டண தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதுபோல் பல்வேறு சேவைகளிலும் இடைத்தரகர்களின் தலையீடு அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தான் அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது திருப்பதி திருமலையில் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஆனி ஆஸ்தானம் நடைபெறும் 9ம் தேதியும், 16ம் தேதியும் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்யப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.