Asianet News TamilAsianet News Tamil

வீட்டின் இந்த திசை மட்டும் எப்போதும் காலியாக இருக்க வேண்டும்- காரணம் இதுதான்..!!

வீட்டின் அனைத்து திசைகளின் முக்கியத்துவம் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதேசமயத்தில் குறிப்பிட்ட திசைளின் பயன்பாடு மற்றும் பலன்கள் குறித்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
 

vastu tips always keep this direction of the house empty for prosperity
Author
First Published Dec 2, 2022, 6:18 PM IST

நாம் விரும்பும் விஷயங்களைச் செய்வதில் அதிகபட்ச நேரத்தை செலவிட விரும்பும் இடம் என்றால் அது வீடு தான். எப்போதும் வீட்டில் நேர்மறையான ஆற்றல் மற்றும் செழிப்பு தலைத்தோங்கி இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அதற்கு வீட்டின் திசைகள் முக்கிய பங்கு வகிப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. திசைகள் மூலம் நேர்மறையான அதிர்வுகள் வீட்டுக்குள் வந்து சேர்க்கின்றன. வீட்டிற்கான வாஸ்து எப்போதும் வீட்டிற்கு நல்ல சக்தியைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறது.எந்த திசையில் எதை வைக்க வேண்டும், எந்த திசை காலியாக இருந்தால் நல்லது, எந்த திசையில் கனமான பொருட்களை வைக்க வேண்டும் என்பதை வாஸ்து சாஸ்திரம் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது.

கிழக்கு திசை

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் கிழக்கு திசை எப்போதும் காலியாக இருக்க வேண்டும். இந்த திசையில் தீபம் ஏற்றுவது மங்களகரமானது. கிழக்கு திசை கிரகங்களின் ராஜா. இந்த இடத்தில் சூரியனும் இந்திரனும் குடிகொண்டு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த திசையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதே சமயம் விநாயகப் பெருமானையும், லட்சுமி தேவியையும் இந்தத் திசையில் சிலைகளை நிறுவி வழிபடுவது நிதி சிக்கலை தீர்க்கும்.

தெற்கு

கனமான பொருட்களை எப்போதும் வீட்டின் தெற்கு திசையில் வைக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த திசையில் செவ்வாய் உள்ளது. அதே நேரத்தில், இந்த திசையில் குளியலறை கட்டப்படக்கூடாது. அவ்வாறு செய்வது அபசகுணமாகும். 

மேற்கு

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் மேற்கு திசையில் சமையலறை கட்டுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வருண பகவான் இந்த திசையில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த திசையில் சமையலறை இருந்தால், வீட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், வீட்டில் இனிமையான சூழல் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

நிதி நெருக்கடியை சரிகட்ட கிராம்பு, கற்பூரம் இருந்தால் போதும்..!!

வடக்கிழக்கு

வீட்டில் எந்த திசையில் செடிகளை நட வேண்டும் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி வடகிழக்கு திசைகள் எப்போதும் மரங்களை நடுவதற்கு உகந்ததாக கருதப்படுகிறது. இந்த திசையில் செடிகளை நடுவது வாஸ்து தோஷங்களை நீக்கி வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வருகிறது.

மரச்சாமான்கள் மேற்கு அல்லது தெற்கு திசையில் வைக்கப்பட வேண்டும். ஷோகேஸ் அல்லது கனமான பொருட்கள் போன்ற மரச்சாமான்கள் தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். குறிப்பாக அந்த பொருட்கள் செவ்வகம் அல்லது சதுரமாக இருக்க வேண்டும், ஓவல், வட்ட அல்லது ஒற்றைப்படை வடிவமாக இருக்கக்கூடாது.

சாப்பாட்டு அறை மேற்கு திசையிலும், சமையலறை தென்கிழக்கு திசையிலும் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சாப்பாட்டு அறை தெற்குப் பக்கம் இருக்கக் கூடாது. வீட்டின் வடகிழக்கு திசையில் நீர் அமைப்பு இருப்பது நல்ல பலனை தரும். 

Follow Us:
Download App:
  • android
  • ios