Asianet News TamilAsianet News Tamil

வாஸ்து டிப்ஸ்: இந்த பொருட்களை தலைக்கு பக்கத்துல வச்சு தூங்காதிங்க!

தூங்கும் போது ஒரு சிலருக்கு அருகில் ஏதாவது ஒரு பொருளை பக்கத்தில் வைத்து தூங்கினால் தான் தூங்கம் வரும். தண்ணீர் பாட்டில், கடிகாரம் போன்றவற்றை உதாரணத்திற்கு சொல்லலாம். இப்படி தூங்கினால் அது மோசமான பழக்கம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.  எனவே தூங்கும் போது, எந்த மாதிரியான பொருட்களை தலைக்கு அருகில் வைக்க கூடாது என்று இங்கு காணலாம்.

vastu don't keep these thing near you while sleeping
Author
First Published Apr 22, 2023, 11:04 AM IST | Last Updated Apr 22, 2023, 11:04 AM IST

படித்துக் கொண்டிருக்கும் போதே தூங்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. இது போன்ற பழக்கங்கள் ஒருவருக்கு தூங்கும் போது இருந்தால், அது அவர்களுக்கு பலவிதமான பிரச்சனைகளைத் தரும் என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்களால் கூறப்படுகிறது.

பெரும்பாலானோருக்கு இரவில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உண்டு. எனவே அவர்கள் தலைக்கு அருகில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு தூங்குவார்கள். ஆனால் வாஸ்துப்படி, நீரை தலைக்கு அருகில் 
வைத்து தூங்கினால், ஜாதகத்தில் உள்ள சந்திரன் பாதிக்கப்படுவதோடு, உங்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படும். ஆகையால் தூங்கும் முன் தண்ணீர்  பாட்டிலை தலைக்கு அருகில் வைத்து தூங்குவதை தவிர்க்கவும்.

இதையும் படிங்க: Today Rasipalan 22nd Apr 2023: வருமானத்திற்கு புதிய வழி பிறக்கும்..! கடினமாக உழைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்

வாஸ்துபடி, இந்த மாதிரியான பழக்கம் பண இழப்பையும், வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இது போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை தலைக்கு அருகில் வைத்து தூங்குவதை தவிர்ப்பது நல்லது.

வாஸ்துபடி, கண்ணாடி படுக்கையை நோக்கியவாறு இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக படுக்கும் போது உங்களது பிம்பம் கண்ணாடியில் தெரிய கூடாது. ஏனெனில் தூக்கத்தில் பேய் கனவு வரும். ஒரு சிலர் கழுவாத டீ கப்பை படுக்கை அறையிலேயே வைப்பர். இது 
அது வறுமைக்கு வழிவகுக்கும்.

மேலும் ஒரு சிலருக்கு தூங்கும் போது தலைக்கு அருகில் மொபைல் போனை வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் உண்டு. அப்படி தூங்கினால் அதிலிருந்து வெளிவரும் கதிர்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறு தூங்கினால் உங்களை சுற்றி எதிர்மறையானவற்றை ஏற்படுத்துத்துவதோடு, வாழ்வின் முன்னேற்றத்தை தடுக்கும். எனவே இரவு தூங்கும் முன் புத்தகத்தை தலைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்காதீர்கள். 

வாஸ்துபடி தலைக்கு அடியில் தங்கத்தை வைத்து தூங்க கூடாது. அப்படி தூங்கினால் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். மேலும் வாழ்வில் பலவிதமான தடைகள் வரும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios