கோவிந்தா..! கோவிந்தா..! பக்தி முழக்கங்களுடன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு..!
108 திவ்யதேசங்களில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திராளன பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்யதேசங்களில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது பார்த்தசாரதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதேபோல், திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில்களில் உள்ளிட்ட கோயில்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் திருக்கோயில்களில் சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது.