வைகாசி விசாகம் 2023 ஜூன் 02ஆம் தேதியா? 03ஆம் தேதியா? முருகன் அருளை பெற எப்போது விரதம் இருக்க வேண்டும்?
முருகனுக்குரிய விரத நாட்களில் சிறப்பு வாய்ந்தது வைகாசி விசாகம். இந்த நாளில் முருகன் பக்தர்கள் பால் காவடியும், பால் குடமும் ஏந்தி ஊர்வலமாக, பாத யாத்திரையாக சென்று முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள்.
Vaikasi Visakam 2023: வைகாசி விசாகத்தில் முருகனுக்கு விரதம் இருந்து வணங்கினால் நினைத்த காரியங்கள் கைகூடும். குழந்தை இன்றி மன வேதனைபடுபவர்களுக்கு குழந்தை வரமும், திருமணம் தடை நீங்கவும், கடன் தொந்தரவு பிரச்சனைகள் அகலவும் வைகாசி விரதம் இருப்பார்கள். முருகன் எப்போதும் நமக்கு துணையிருப்பார் என்றாலும் வைகாசி விசாகத்தில் விரதமிருந்து வழிபட்டால் மனங்குளிர்ந்து அருள்பாலிப்பார்.
வைகாசி விசாகம்
திதிகளில் சஷ்டியும், நட்சத்திரங்களில் பூசம், உத்திரம், விசாகம், கிருத்திகையும் முருகன் வழிபாட்டுக்கு ஏற்ற நாள்களாக குறிப்பிடப்பட்டுகின்றன. இதில் சிறப்பு என்னவெனில் சில தமிழ் மாதங்களில், பெளர்ணமி தினத்தில் இந்த நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து வரும். அந்த நாளை சிறப்பான நாளாக கருதி வழிபாடு செய்யப்படுகிறது. உதாரணமாக, கார்த்திகையில் கிருத்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் தினத்தை நாளை திருக்கார்த்திகை நாள் என சொல்வார்கள். அப்படிதான் வைகாசியில் விசாக நட்சத்திரத்துடன் இணைந்து வரும் பெளர்ணமியை வைகாசி விசாகம் ஆகும்.
வைகாசி விசாகம் சிறப்பு
முருகன் அவதரித்த நாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது. ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் விசாக நட்சத்திரம் மட்டுமே சிறப்பு வாய்ந்தது. இது ஆறு நட்சத்திரங்களை உள்ளடக்கியது. முருகனும் ஆறு திருமுகங்களை கொண்டவர். ஆகவே இது முருகனுக்கு உரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. அது மட்டுமில்லை முருகனுடைய மற்றொரு முக்கிய விரதமான கந்தசஷ்டி விரதம் கூட ஐப்பசியில் வரும் விசாக நட்சத்திரம் அன்றே தொடங்குகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, விசாகத்தின் அதிபதி குரு பகவான். இவர் வீரம், வீடு மனை, வாகனம், பதவி, திருமணம், குழந்தைப்பேறு, உறவுகள், செல்வம் ஆகியவற்றை ஆட்டி வைப்பவர். முருகன் செவ்வாய்க்கு உரிய தெய்வம். குரு பகவானின் விசாகம் நட்சத்திரமும், செவ்வாயின் தெய்வமான முருகனும் ஒரே நாளில் சேர்ந்து வருவதாலும் இந்தாண்டு வைகாசி விசாகம் மிகச்சிறப்பு வாய்ந்த நாளாக கருதுப்படுகிறது.
வைகாசி விசாகம் 2023 எப்போது?
விசாக நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்ந்து வரும் தினத்தை தான் வைகாசி விசாகம் என அழைப்பார்கள். இந்தாண்டில் வைகாசி விசாகம் ஜூன் 02ஆம் தேதி வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் பெளர்ணமி திதியானது ஜூன் 3ஆம் தேதி தான் தொடங்கவுள்ளது. ஜூன் 02ஆம் தேதி காலை 05.55 மணிக்கு தொடங்கி, ஜூன் 03ஆம் தேதி காலை 05.54 மணி வரை விசாகம் நட்சத்திரம் இருக்கும். பெளர்ணமி திதியானது ஜூன் 03ஆம் தேதி காலை 10.54 மணிக்கு தொடங்கி, ஜூன் 04ஆம் தேதி காலை 09.34 மணி வரை இருக்கும். இப்படி வெவ்வேறு நாளில் திதிகள் வருவதால் வைகாசி விசாகம் எப்போது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஜூன் 02ஆம் தேதியா அல்லது 03ஆம் தேதியா? வைகாசி விசாகம் எப்போது என்ற குழப்பம் பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் விரதம் எப்போது இருக்க வேண்டும் எனவும் குழம்பிப் போய் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: குலம் காக்கும் குலதெய்வம் யார் என்று தெரியாமல் கவலையா? இந்த 1 காரியம் செய்தால் உங்க குலதெய்வம் மனதில் தோன்றும்
வீட்டில் உள்ள நாட்காட்டிகளில் ஜூன் 02ஆம் தேதியே வைகாசி விசாகம் என்றும் போடப்பட்டுள்ளது. மனிதர்களை பொறுத்தவரை பிறந்தநாள்கள் நட்சத்திரங்கள், தெய்வங்களின் அவதார நாளின் திதியின் அடிப்படையில் தான் கணக்கிடப்படுகின்றன. இங்கு திதியை ஒப்பிடுவதை விட முருகன் அவதரித்தத விசாக நட்சத்திரம் தான் கவனிக்கக் கூடியது. ஆகவே விசாக நட்சத்திரம் வரும் தினமான ஜூன் 02ஆம் தேதியை வைகாசி விசாக நாளாக ஆன்மீக பெரியோர் குறிப்பிடுகிறார்கள். மேலும் ஜூன் 03ஆம் தேதியை பெளர்ணமி நாளா கருதி அன்றைய தினம் பெளர்ணமி விரதம் இருக்கலாம். ஜூன் 02ஆம் தேதியில் வைகாசி விசாக விரதம் இருக்கலாம்.
இதையும் படிங்க: செல்வம் செழிக்க ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போதும்!! இதை செய்தால் வீட்டில் உள்ள பணக்கஷ்டம் அத்தனையும் நீங்கும்!!