Vastu Tips : வாடகை வீடுகளில் எப்படி வாஸ்து பார்ப்பது?
நமது இந்திய தேசத்தின் பாரம்பரிய கட்டடக் கலை தான் வாஸ்து சாஸ்திரம். கட்டிடங்களின் தள அமைப்பு மற்றும் அளவீடுகளை திசைகளின் தத்துவ முறைகளுக்கு ஏற்றவாறு விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப் பூர்வமாகவும் நன்கு ஆராய்ந்து நமது வாழ்விடங்களுக்குத் தேவையான வாழ்வியல் குறிப்புகளை தந்துள்ள குறிப்புகள் என்றே கூற வேண்டும். அதனால் தான் வீடுகள் கட்டும் போது வாஸ்து பார்ப்பது முக்கியமானதாக அமைகிறது.
நமது இந்திய தேசத்தின் பாரம்பரிய கட்டடக் கலை தான் வாஸ்து சாஸ்திரம். கட்டிடங்களின் தள அமைப்பு மற்றும் அளவீடுகளை திசைகளின் தத்துவ முறைகளுக்கு ஏற்றவாறு விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப் பூர்வமாகவும் நன்கு ஆராய்ந்து நமது வாழ்விடங்களுக்குத் தேவையான வாழ்வியல் குறிப்புகளை தந்துள்ள குறிப்புகள் என்றே கூற வேண்டும். அதனால் தான் வீடுகள் கட்டும் போது வாஸ்து பார்ப்பது முக்கியமானதாக அமைகிறது.
குறிப்பாக சமையலறை அக்னி மூலையிலும், படுக்கையறை காற்றோட்டம் உள்ள இடத்திலும், பூஜையறை ஈசானி மூலையிலும், பணப்பெட்டியை குபேர மூலையிலும் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. சரி.. இவையனைத்தும் சொந்த வீடு கட்டும் போது சரிபார்த்து கட்டலாம். ஆனால் வாடகை வீடுகளில் எப்படி வாஸ்து பார்ப்பது? என்ற சந்தேகம் பெரும்பாலான நபர்களுக்கு உள்ளது.
வேதங்கள் மொத்தம் நான்கு உள்ளது. அதில் அதர்வண வேதம் மற்றும் ஸ்தாபத்திய வேதத்தில் வாஸ்து சில்ப சாஸ்திரம் என்கிற தலைப்பில் கட்டடங்கள் எப்படி கட்ட வேண்டும் என்ற தலைப்பில் பல கருத்துக்கள் உள்ளது.
இந்த கருத்தில் கூறியபடி, ஒருவன் வாஸ்துவை முறையாக பின்பற்றி எந்த கட்டிடம் கட்டி வாழ்ந்தாலும் அவன் அளவற்ற செல்வத்தையும், அவன் மட்டுமின்றி அவனுக்கு பின்வரும் சந்ததியினர் வாழ்க்கையிலும் அளவற்ற மகிழ்ச்சியையும், அனைத்து பேறுகளையும் பெற்று இறுதிவரை இன்பமாக வாழ்வான்.
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா?
சரி வாஸ்து என்றால் என்ன?
வாஸ்து என்பது முன்னரே சொன்னபடி, அதுவொரு புவியியல் சார்ந்த விஞ்ஞானம். ஆனால் பூமி முழுதும் வாஸ்து பார்க்கும் முறை ஒரே மாதிரியாக இருக்காது. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதத்தில் நமக்கு சாத்தியமான நிலம், நீர், நெருப்பு ஆகிய மூன்றும் சரிவிகிதத்தில் ஆன சேர்க்கையை வாஸ்து என்று அழைக்கலாம்.
இதில் வாஸ்து என்றால் பொருள்களையும், வஸ்து என்றால் இடங்களையும் குறிக்கும். பொருள்களுக்கு ஏற்றப்படி இடங்களை அமைத்தால் வளமோடு வாழ்வார்கள் என்பதே வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் வாஸ்து சாஸ்திரமானது ஊருக்கு ஊர் மாறுபடுகிறது. இதை முதலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வாடகை வீட்டில் இருந்து கொண்டு எப்படி வாஸ்து எல்லாம் பார்ப்பது என்றால்.. நீங்கள் குடியிருக்கும் வீட்டினால் ஏற்படும் நன்மை, தீமைகள் எல்லாம் வீட்டின் உரிமையாளருக்கு இல்லை. அங்கு குடியிருக்கும் உங்களுக்கு தான் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
பித்ருதோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா.. தோஷம் குறைய இதை செய்யுங்க!
நமது முன்னோர்கள் விஞ்ஞானத்தை முன்னறிந்து அதை அனைவரும் தவறில்லாமல் கடைப்பிடிக்கவே ஓர் இறை சக்தியை அவற்றுக்குள் கொண்டுவந்து நம்மை வணங்க வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வாஸ்துவுக்கான தெய்வமாக நாம் வணங்கும் வாஸ்து புருஷன் ஸ்ரீமந் நாராயணனின் அம்சம். இந்த பூலோகம் அவரது பூவுடலே என்பதால் நாம் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் அவரது அனுமதி பெற்று செய்யவேண்டுமென்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாஸ்துபகவானை வணங்கி எல்லா வளமும் பெறுவோம்.