நாளை வைகுண்ட ஏகாதசி... விரதத்தை தொடங்குவதும் நிறைவு செய்வதும் எப்படி? முழு விவரம் உள்ளே!!
பெருமாளுக்கு உகந்த நாளாக வைகுண்ட ஏகாதசி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பக்தர்கள் விரதத்தை தொடங்குவதும் நிறைவு செய்வதும் எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
பெருமாளுக்கு உகந்த நாளாக வைகுண்ட ஏகாதசி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பக்தர்கள் விரதத்தை தொடங்குவதும் நிறைவு செய்வதும் எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. பெருமாளுக்கு உகந்த நாளாக வைகுண்ட ஏகாதசி பார்க்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதியில் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் ஏகாதசி திதிகள் சிறப்புமிக்கவை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 2 முறை அதாவது ஜன.2 மற்றும் டிச.23 ஆகிய தேதிகளில் வைகுண்ட ஏகாதசி வருகிறது. அதன்படி இந்த ஆண்டின் முதல் வைகுண்ட ஏகாதசி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து விருதமிருந்து பெருமாளை வழிபடுவர். பக்தர்களுக்கு சொர்க்க வாசல் வழியே பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த நிகழ்வு அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடக்கும். குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
இதையும் படிங்க: Today Rasipalan 1 Jan 2023 | இன்றைய ராசிபலன்
விரதம் இருக்கும் முறை:
வைகுண்ட ஏகாதசி நாளை கொண்டாடப்பட்ட உள்ள நிலையில் இன்று இரவு உணவுக்கு பிறகு நாளை (ஜன.2) அதிகாலை 3 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டவுடன் விரதத்தை துவங்க வேண்டும். சொர்க்கவாசல் திறந்தவுடன் கோயிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலோ பெருமாளை வழிப்பட வேண்டும். அதன்பின், அடுத்த நாள் காலை பூஜையை முடித்துவிட்டு உணவை சாப்பிடலாம். அதாவது ஜன.3 ஆம் தேதி அதிகாலை தலைகுளித்துவிட்டு பெருமாளை வழிபட்டுவிட்டு பிறகு 21 காய்கறிகளை பயன்படுத்தி சமைத்து சமைத்த உணவுகள், இனிப்பு, பழங்கள் போன்றவற்றை வைத்து நைவேத்தியம் செய்த பிறகு சாப்பிட வேண்டும்.
இதையும் படிங்க: Weekly Horoscope : இந்த வார ராசி பலன்! (2nd Jan To 8th Jan 2023) - புத்தாண்டின் முதல் வாரம்!
வழக்கத்திற்கு மாறாக வரும் வைகுண்ட ஏகாதசியும், பிரதோஷமும்:
பொதுவாக ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே வைகுண்ட ஏகாதசி வரும் நிலையில் இந்த ஆண்டு 2 முறை வருவதால் 2 முறை சொர்க்கவாசல் திறக்கப்படுமா என்பது குறித்து தகவல் ஏதும் தெரியாவில்லை. இருந்தபோதிலும் ஒரே ஆண்டில் 2 முறை வைகுண்ட ஏகாதசி வருவதை பக்தர்கள் நல்ல விஷயமாகதான் பார்க்கிறார்கள். இந்த ஆண்டு வைக்குண்ட ஏகாதசி மட்டும் வழக்கத்திற்கு மாறாக வரவில்லை, சிவனுக்கு உகந்த பிரதோஷமும் வழக்கத்திற்கு மாறாக வருகிறது. பொதுவாக மாதம் 2 முறை மட்டுமே வரும் பிரதோஷம், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் 3 முறை வருகின்றன.
இதையும் படிங்க: இடம் மாற போகும் திருப்பதி கோவில்.. 70 லட்சம் வீட்டை கோவிலுக்கு எழுதிக்கொடுத்த தமிழ்நாட்டு பெண் !!
முதலில் ஜூலை.1 மற்றும் ஜூலை.15 ஆம் தேதி ஆகிய 2 நாட்களும் பிரதோஷம் வருகிறது. அதேபோல் ஜூலை 30 ஆம் தேதி ஒரு பிரதோஷம் வருகிறது. ஐதீகப்படி சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷத்தை மகாபிரதோஷம் என்பார். அந்த வகையில் ஜூலை மாதம் வரும் 2 பிரதோஷமும் சனிக்கிழமை வருவதால் ஒரே மாதத்தில் 2 மகாபிரதோஷம் வருவது சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது. மேலும் ஜூலை 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் பிரதோஷம் வழக்கத்திற்கு மாறாக வரும் பிரதோஷமாக பார்க்கப்படுகிறது. பிப்ரவரி.18 ஆம் தேதி வரும் பிரதோஷமும் சனிக்கிழமை என்பதால் அதுவும் மகாபிரதோஷமாக பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.