Asianet News TamilAsianet News Tamil

வரும் 2023-ம் ஆண்டு 6 முதல் 8 மாதங்களுக்கு மூடப்படும் திருப்பதி ஏழுமலையான சன்னதி..!!

வரும் 2023-ம் ஆண்டில் முதல் 8  மாதம் திருப்பதி திருமலை கோயிலின் கர்ப்பகிரகத்தை பூட்டிவைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு திம்மப்பன தரிசனம் கிடைக்காமல் போகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Tirupati sanctum sanctorum to remain shut for 6-8 months in 2023
Author
First Published Dec 28, 2022, 4:11 PM IST

ஆந்திர பிரதேசத்தில் உலகளவில் பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரதான சன்னதி வரும் 2023-ம் ஆண்டுக்குள் 6 முதல் 8 மாதங்களுக்கு மூடப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்றான திருமலை திருப்பதி கோயிலின் கருவறையில் உள்ள ஆனந்த நிலையம் என்ற 3 அடுக்கு கோபுரம் தங்க முலாம் பூசப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு பூச்சு பணி முடியும் வரை கருவறையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 6-8 மாதங்கள் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்க முலாம் பூசும் வரை, வெங்கடேசப் பெருமானின் சிலை பிரதான கோவிலுக்கு அடுத்துள்ள ஒரு தற்காலிக கோவிலில் வைக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பாலாலயம் என்கிற பெயரில் அமையும் இந்த தற்காலிக கோயில், தற்போதுள்ள கோயில் வளாகத்திற்கு அருகிலேயே கட்டப்படும். இதனால் பக்தர்கள் தடையின்றி வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்யலாம். பாலாலயம் கட்டும் பணி பிப்ரவரி 23ம் தேதி துவங்குகிறது.

ஆனந்த நிலையம் கடைசியாக 1958 இல் தங்க முலாம் பூசப்பட்டது. இது கடந்த 1950-ம் ஆண்டு தொடங்கி 8 ஆண்டுகள் வரை கட்டப்பட்டது. பல்லவ மன்னர் விஜய தந்திவர்மன் காலத்தில் கி.பி. 839-ம் ஆண்டு முதன்முதலாக தங்க முலாம் பூசப்பட்டது. அதன் பிறகு, தங்க முலாம் ஏழு முறை மாற்றப்பட்டது என்று திருப்பதி மலையில் காணப்படும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

கடந்த 1950-ம் ஆண்டு தங்க முலாம் பூசுவதற்கு சுமார் 120 கிலோ தங்கம் கொண்டு விமானம் உருவாக்கப்பட்டது. அதற்கு 12 டன் செம்பு பயன்படுத்தப்பட்டது. புதியதாக அமையவுள்ள தங்க முலாம் பூசப்படும் விமானத்துக்கு வேண்டி திருப்பதி தேவஸ்தானம் எவ்வளவு செலவழிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

சாமந்தி முதல் ஊமத்தம் வரை- கடவுள் வழிபாட்டுக்கு உகந்த 5 மலர்கள்..!!

கடந்த நவம்பர் மாதம் திருப்பதி தேவஸ்தானம்  வெளியிட்ட அறிக்கையின்படி, ரூ.5,300 கோடி மதிப்புள்ள 10.3 டன் தங்கம் கையிருப்பு மற்றும் பல்வேறு வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ.16,000 கோடி ரொக்க டெபாசிட் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழறிஞர் எம் வரதராஜனின் ஆனந்த நிலைய விமானத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் 2018-ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் திருமலை கோவிலின் விமானம் பற்றிய சில விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விமானம் 37.8 அடி மூன்று அடுக்கு அமைப்பு கொண்டது மற்றும் இதன் சதுர அடித்தளம் 27.4 அடி சுற்றளவு கொண்டதாகும். அதனால் புதிய அளவிலான தங்கத்தின் எடையை கோபுரம் தாங்குமா என்கிற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios