Asianet News TamilAsianet News Tamil

டிசம்பரில் ஏழுமலையானை தரிசிக்க இன்று முதல் முன்பதிவு செய்யலாம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

டிசம்பர் 1 முதல் 20 வரை தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டு காலை 10 மணிக்கு வெளியாகும் என்று திருமலை திருப்பதி  தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tirumala Tirupati December Darshan Ticket Bookings open today sgb
Author
First Published Sep 25, 2023, 7:36 AM IST | Last Updated Sep 25, 2023, 7:40 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. டிசம்பர் 1 முதல் 20 வரை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சதுரகிரி யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி: வனத்துறை அறிவிப்பு

https://tirupatibalaji.ap.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று பக்தர்கள் தரிசன டிக்கெட்டை பதிவு செய்யலாம். தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள், குறிப்பிட்ட நாளில் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய வரவேற்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios