திருமண தடை குழந்தை பாக்கியம்.. நீங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றும் பசுபதீஸ்வரர் கோயில்! எங்குள்ளது தெரியுமா

 

அருள்மிகு பசுபதீஸ்வரர் கோயிலில் சென்று நீங்கள் வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகி நினைத்த காரியங்கள் நடைபெறும். 

 

thiruvarur Pasupatheeswarar Temple significance

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் திருக்கண்டீஸ்வரம் வழியாக சென்றால் அருள்மிகு பசுபதீஸ்பார் திருக்கோயிலை அடையலாம். இந்த கோயில் ரொம்ப சிறப்பு வாய்ந்தது. ஒருமுறை இங்கு சென்று சிவனை வழிபட்டால் போதும். நீங்காத துன்பம் எல்லாம் நீங்கும். இங்கு தரிசனம் செய்தால் மன அமைதி கிடைக்கும். அந்த அளவுக்கு இக்கோயில் அற்புத சக்தி கொண்டது என்றும் சொல்லப்படுகிறது. 

புராண கதை 

கையிலாயத்தில் சிவபெருமான் உமாதேவிக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தபோது அதை கவனிக்காமல் அவர் வேறு சிந்தனையில் இருந்துள்ளார். 1 முறை இருமுறை மூன்று முறை என சிவன் சொல்லியும் உமாதேவி கேட்கவில்லை. அப்போது கோபமடைந்த சிவபெருமான் உமாதேவிக்கு சாபம் கொடுத்துவிட்டாராம். "சிவன் சொல்வதை கேட்காமல் இருந்த காரணத்தால் பசுவாக மாறு" என்பதாக உமாதேவியை பார்த்து சிவன் சொல்லவும், அவர் பசுவாக மாறிவிட்டார். மேலும் பூமியில் சிவன் தவமிருக்கும் இடத்தை கண்டுபிடித்து காமதேனுவாக மாறிய உமாதேவி சென்றுவிட்டால், அவர் மீண்டும் மனித தோற்றம் பெறமுடியும் என்றும் சிவன் சொல்லி மறைந்தார். உமாதேவி மனமுடைந்து சமுத்திரத்தில் விழ போகவே, சமுத்திரராஜன் மகாவிஷ்ணுவுக்கு தகவல் கொடுத்துள்ளார். மகாவிஷ்ணு 10 காமதேனுவை சமுத்திரத்திற்கு அனுப்ப, அதை கண்டு உமாதேவி அங்கிருந்து வெளியே அவற்றை பின்தொடர்ந்தார். தன் கொம்பால் கீறி கொண்டே சென்ற உமாதேவி, வில்வாரண்யதில் தவமிருந்த சிவனின் தலையையும் கீறிவிட்டார் என்பது புராணம். இதற்கு சான்றாக திருவாரூர் பசுபதீஸ்பார் கோயில் சிவலிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவு இன்றும் காணப்படுகிறது. 

இதையும் படிங்க: சூரிய கிரகணம் – எதை எல்லாம் செய்யலாம்! கண்டிப்பாக கர்ப்பிணிகள் தேங்காய் வைத்து கொள்ள வேண்டும்.. ஏன் தெரியுமா?

பசுபதீஸ்வரர் கோயில் சிறப்புகள் 

  • இந்த கோயிலின் பிராகாரத்தில் விநாயகர், தட்சிணாமூரத்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், வைரவர், திருநாவுக்கரசர் சன்னதிகளும் உள்ளன. இங்கு காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பூஜை வழிபாடுகள் நடைபெறும். இந்தக் கோயிலில் உள்ள குளத்தில் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் நீராடி பிரார்த்தனை செய்வது ஐதீகம். இதனால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமாம். 
  • திருமணத்தில் தடை இருப்பவர்கள் இத்தலத்திற்கு சென்று ஜேஷ்டா தேவிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.  
  • சுவாமி மண்டபத்தில் ஒரு தூணில் 3, தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹேஸ்வரர் அருள்பாலிக்கிறார். கடுமையான காய்ச்சலால் அவதிபடுவர்கள், அவரை வணங்கி வெந்நீரில் அபிஷேகம் செய்து அன்னத்துடன் மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் பூரணமாக குணமாகும். 
  • குடும்பத்தில் சண்டை, வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு விவாகரத்து வரை கூட சென்றாலும் இங்கு வழிபட்டால் கணவன், மனைவி ஒற்றுமை வலுப்பெறும் என்பது நம்பிக்கையாக பின்பற்றப்படுகிறது. 
  • எந்த பிரச்சனையாக இருந்தாலும் விரைவில் நீங்கு நல்ல பலன் கிடைக்கும். ஒருமுறை திருவாரூர் பசுபதீஸ்வரர் கோயில் சென்று வழிபட்டு பாருங்கள். 

இதையும் படிங்க: ராகு காலம், எமகண்ட நேரம் உண்மையில் கெட்ட நேரம் கிடையாது.. அப்போ இந்த காரியங்களை செய்தா இவ்ளோ நன்மைகள் இருக்கு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios