சிவ வாத்தியங்கள் முழங்க.. பக்தர்கள் கோஷம் விண்ணைப் பிளக்க அசைந்து வரும் தஞ்சை பெரிய தேர்..!
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது பழக்கம். இதேபோல் இந்த ஆண்டு கடந்த 6ம் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரிய கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது பழக்கம். இதேபோல் இந்த ஆண்டு கடந்த 6ம் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் காலை - மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதையும் படிங்க: School College Holiday: தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!
பெரிய கோவிலில் இருந்து தியாகராசர் - கமலாம்பாள் உற்சவமேனிகள் தேரில் எழுந்தருள மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். 43 டன் எடையும் - 35 அடி உயரமும் கொண்ட தேரினை ஏராளமான பக்தர்கள் தியாகேசா - ஆருரா, பெருவுடையார் என கோஷங்கள் விண்ணதிர எழுப்பி தேரினை இழுத்தனர்.
இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை ஊத்தப்போகுதாம்! சென்னை வானிலை மையம் அலர்ட்!
தேரினை முன்னிட்டு தஞ்சை மாநகரம் திருவிழா கோலம் பூண்டிருந்தது. மேலும் இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவினை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.