List of Actors Built Temples in Tamilnadu : தளபதி விஜய், அர்ஜுன், யோகி பாபு உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கட்டிய பிரம்மாண்ட கோயில்கள் எங்கெங்கு உள்ளன? அந்த கோயில்களின் சிறப்பம்சங்கள் என்ன? என்று பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பல உள்ளன . அதில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்காக கோயில்கள் கட்டி வழிபாடு செய்து அதனை காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர்‌. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவாமியை தம் மனதார நினைத்து வழிபடுபவர்கள் இருக்கிறார்கள் அவர் அவர்களுக்கு என்று ஒரு இஷ்ட தெய்வத்திற்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர் அவர்களுள் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில்: 

தமிழ் சினிமா துறையில் ஆக்‌ஷன் கிங் என அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் ஒரு தீவிர ஆஞ்சநேயர் சுவாமி பக்தர் .இவர் சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவில் கட்டியுள்ளார். இந்த கோயில் தனது 17 வருட கனவு என்று கூறியுள்ள அர்ஜுன், கோயிலில் 180 டன் எடைகொண்ட ஒற்றைக்கல் ஆஞ்சநேயர் சுவாமிசுவாமி சிலை சிறப்பம்சமாக உள்ளது . இங்கு ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது.

விஜய் கட்டிய சாய்பாபா கோயில்: 

சென்னை கொடுங்கையூரில் விஜய் தன் அம்மாவின் நீண்ட நாள் கனவான சாய்பாபா கோயில் கட்டியுள்ளார். பெரிய அளவில் இந்த கோயில் அமைந்துள்ளது தினமும் அன்னதானமும் ஒவ்வொரு கால பூஜை என்பதும் பிரசாதமும் இங்கு கொடுக்கப்படுகிறது. இந்த கோயிலை சாய்பாபா மந்திர் என்று கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா கோயில்: 

எம்.ஜி.ஆருக்குத் தன் தாயார் மீது இருந்த பாசத்தின் காரணமாக, அவரது கோடம்பாக்கம் வீட்டிலேயே தாயார் சத்யபாமாவிற்காக ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது, அதனை அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும் பராமரித்து வருகின்றனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கட்டிய சிவ சுடலை மாடன் சுவாமி கோயில்: 

சண்டை இயக்குநர் கனல் கண்ணன் கட்டிய ஸ்ரீ சிவசுடலைமாட சுவாமி திருக்கோவில் சென்னையில் உள்ள மதுரவாயலில் அமைந்துள்ளது. பிரதான தெய்வங்களாக ஸ்ரீ சிவசுடலைமாட சுவாமி, ஸ்ரீ இசக்கி அம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பசாமி ஆகியோர் உள்ளனர்.

நடிகர் டேனியல் பாலாஜி கட்டிய அங்காள பரமேஸ்வரி கோயில்:

சென்னைக்கு அருகிலுள்ள ஆவடி பகுதியில் ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை கட்டியுள்ளார். அவருக்கு போதுமான அளவு பணம் கிடைக்காததால் அவருக்கு நடிகர் யஷ் அவர்களும் உதவி செய்துள்ளார். இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டு, பலரும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

பருத்திவீரன் புகழ் சரவணன்:

நடிகர் சரவணன் தனது சொந்த ஊரான சேலம் ஓமலூரில் வெற்றி விநாயகர் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இது அவரது நீண்ட கால ஆசையாக இருந்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். இந்த கோயில் கட்டுவதற்கான முக்கிய காரணம் அவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவின் ஒரு பகுதியாக இந்த வெற்றி விநாயகர் கோயில் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால், அவருக்கென்று தனியாக கோயில் கட்டியுள்ளார். அதுவும், தனது சொந்த கிராமத்திலேயே கட்டியிருக்கிறார்.