இன்று தைப்பூசம் 2024 : தை பௌர்ணமி விரதம் தரும் நன்மைகள்.. மாலையில் இத செய்ய மறக்காதீங்க..!!

தைப்பூசம், தை பௌர்ணமி விரதம் இருந்தால், முக்தி கிடைக்கும் ஆய்வில் திருத்தி உண்டாகும் என்பது ஐதீகம்.

thaipusam 2024 thai pournami viratham procedure and its benefits in tamil mks

இந்து மதத்தில் பிற கடவுளைக் காட்டிலும், முருகப் பெருமான் தான் அதிகமாக வழிபடப்படுகிறது. அதுபோல், தன்னை நாடி வருவோருக்கு முருகப் பெருமான் கேட்கும் வரங்களை கொடுப்பதால், பெரும்பாலானோர் நம்பிக்கையுடனும், நன்றியுடனும் முருகனை குலதெய்வமாக ஏற்று வழிபட்டு வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் முருகனை வழிபடுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது..

இந்நிலையில், இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் பல்வேறு விரத வழிபாடுகளையும் பின்பற்றி வருகின்றனர். அதுவும் குறிப்பாக ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமி, அமாவாசை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி, அமாவாசை மிகவும் சிறப்பானது தான். ஆனால், தை மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி, அமாவாசை இரு திதிகளும் மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை தான் நாம் தைப்பூசமாக கொண்டாடுகிறோம். இந்த தைப்பூசம் நாளானது முருகப்பெருமானுக்கு உரிய சக்தி வாய்ந்த திருநாள் ஆகும்.

தைப்பூசம் 2024 எப்போது?
ஜனவரி 25ஆம் தேதி அதாவது இன்று தான் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. அதாவது ஜனவரி 25ஆம் தேதி காலை 9:14 முதல் ஜனவரி 26 ஆம் தேதி காலை 10:07 வரை பூச நட்சத்திரம் ஆகும். மேலும் இஜனவரி 24ஆம் தேதி இரவு 10:44 முதல் ஜனவரி 25ஆம் தேதி இரவு 11:56 வரை பௌர்ணமி திதி வருவதால், இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

தை பெளர்ணமி விரதம்:
இன்று தைப்பூசம்.. இந்நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி நெற்றி நிறைய திருநீறு வைத்து, வீட்டில் விளக்கேற்ற வேண்டும். பிறகு வீட்டில் இருக்கும் முருகப்பெருமானின் படத்திற்கு மலர்கள் சூடி வழிபட வேண்டும். ஒருவேளை, உங்கள் வீட்டில் முருகனின் சிலை இருந்தால் அதற்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம் என உங்களால் முடிந்த அபிஷேகங்களைச் செய்து வழிபட வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தை பெளர்ணமி விரதம் எப்படி இருக்க வேண்டும் ?
தை பெளர்ணமி விரதம் இருப்பவர்கள் உங்களால் முடிந்தால் இந்நாள் முழுவதும் விரதம் இருங்கள். இல்லையெனில் காலை மற்றும் மதியம் என இருவேளையும் விரதம் இருங்கள். அச்சமயத்தில் நீங்கள் 
பால், பழம் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு மாலை வேளையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வணங்குங்கள். 

இதையும் படிங்க:  களைகட்டும் தைப்பூச திருவிழா.. முருகன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..

மேலும் விரத நாளில் காலை, மாலை என இருவேளையும் முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபடலாம். உங்களால் முடிந்தால் மட்டும் இதைச் செய்யுங்கள். அதுபோலவே,  முருகப்பெருமானுக்குக் காவடி எடுப்பது, பால் குடம் சுமப்பது போன்றவற்றில் நீங்கள் கலந்து கொள்ளலாம். இதனால் முருகனின் அருள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிங்க:  தைப்பூசம் 2024 எப்போது? கேட்டதை கொடுக்கும் முருகனுக்கு எப்படி விரதம் இருப்பது?

தை பௌர்ணமி விரத பலன்கள்: 
தைப்பூசம், தை பௌர்ணமி விரதம் நாளில் முருகனின் மந்திரத்தை சொல்லி வழிபட்டால் முக்தி கிடைக்கும் அது போல் அந்நாளில் விளக்கேற்றி வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும் என்பது ஐதீகம். மேலும் இந்நாளில் மொழிகளில் முருகனின் வழிபாட்டு ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் செல்வ வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios