தை மாதத்தில் கல்வி, கலை வித்தைகளில் சிறப்பு தரும் சியாமளா நவராத்திரி திருவிழா, தேவி பாகவதத்தில் கூறப்பட்ட நான்கு நவராத்திரிகளில் ஒன்றாகும். இது சரஸ்வதி தேவியின் அம்சமாக வழிபடப்படுகிறது.
நவராத்திரி என்றால் புரட்டாசி அமாவாசை கழித்து ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். ஆனால் சியாமளா நவராத்திரி திருவிழா 9 நாட்கள் விரதம் இருந்து கோலாகலமாக கொண்டாடப்படும். நவராத்திரி ஒரு அம்பிகையை வழிபடும் சாக்தம் என்று தனித்த மதமாக விளங்கியபோது பன்னிரண்டு மாதங்களுமே நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது அதுவே நான்கு நவராத்திரிகளாக மாற்றம் கொண்டன.
ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்று நான்கு நவராத்திரிகளில் ஒன்பது நாட்கள் நடைபெறும் அதில் மிகவும் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட இருப்பது தை மாதத்தில் வரும் சியாமளா நவராத்திரி திருவிழா தான்.சியாமளா நவராத்திரி பூஜை தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம்.
அம்பாளின் நவராத்திரி:
அம்பாள் 9 நாட்கள் தவமிருங்கி, பல விதமான சக்திகளை பெற்று, மூன்று தேவியர்களின் சக்தியும் ஒன்று சேர்ந்து, மகிஷாசுரன் என அரக்கனை வதம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி அம்பாள் தவம் செய்த 9 நாட்களை நவராத்திரி என்றும், அசுரனை அம்பாள் வதம் செய்து வெற்றி கொண்ட நாளை விஜய தசமி என்றும் கொண்டாடுகிறோம். தென்னிந்தியாவில் சாரதா நவராத்திரி கொண்டாடபடுகின்றனர்.
பஞ்சமி விரதம்:
பஞ்சமி திதி என்பது வாராஹி வழிபாட்டு விரதம் இருப்பதாகும். வாராஹி வழிபாடு பகையை அழிக்கக் கூடியது. பஞ்சமி திதியில் வாராஹி அம்மனை வழிபட்டால் மன சஞ்சலங்கள் விலகும், வீண் கலக்கம், சத்ரு பயம் ஆகியவற்றை விலக்கி, சந்தோஷத்தை தரும். வாராஹி அம்மன் சப்த தேவியர்களில் ஒருவர் என்பதால் இந்த நாளில் விரதமிருந்து மாலையில் விளக்கேற்றி வாராஹி அம்மனை வழிபட்டால் வகைவர்களால் ஏற்படும் தொலைகள் விலகும். பகைவர்களிடம் இருந்து விலக முடியும்.
சியாமளா நவராத்திரி :
நவராத்திரிகளும் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக தை மாத வளர்பிறையில் வரும் சியாமளா நவராத்திரியை பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள். சியாமளா நவராத்திரியில் வரும் வசந்த பஞ்சமி மிகவும் சிறப்புடையது. சியாமட நவராத்திரியில் மதுரை மீனாட்சி அம்பாளுக்கு சிறப்புடையதாக விரும்புகிறது. இவர் பச்சை நிறத்தில் இருப்பதால் இந்த அம்மனுக்கு சியாமளா நவராத்திரி திருவிழா நடைபெறுகிறது.இந்த நாளில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை வழிபடுகின்றனர். சரஸ்வதி தேவி பச்சை நிறத்தில் உடைய அம்பாளாக இருப்பார் அது மதுரை மீனாட்சி அம்மன் குறிக்கும். மீனாட்சி அம்மன் கோயிலில் சியாமளா நவராத்திரி மிகச் சிறப்பாக நடக்கும்.புத்தகம், என்று பேனா போன்ற பொருட்களை சரஸ்வதி தேவியின் படத்தின் முன் வைத்து வழிபடுகின்றனர்.
கடைப்பிடிக்க வேண்டியவை:
சியாமளா நவராத்திரி நடைபெறும் நாள்களில் காலையும் மாலையும் பூஜை அறையில் விளக்கேற்றி அம்பாளை ஸ்தோத்திரம் செய்ய வேண்டும். சியாமளா தண்டகம் போன்ற ஸ்லோகங்களை வாசிக்கத் தெரிந்தவர்கள் பாராயணம் செய்யலாம். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்து பாயசம் நிவேதனம் செய்தால் மிகுந்த பலன்கள் உண்டாகும். பச்சை வண்ண உடையை அம்பிகையின் படத்துக்கு அல்லது திருவுருவத்துக்கு சாத்தி அதை தானம் செய்தால் துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
