ஸ்ரீபெரும்புதூரில் சிவனுக்கு இப்படி ஒரு ஆலயமா? அதுவும் பூதங்கள் கட்டியதா? சுவாரஸ்யமான தகவல் இதோ...!!
ஸ்ரீபெரும்புத்தூரில் அமைந்துள்ள பூதபுரீஸ்வரர் கோயில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தக் கோயில் பூதங்களால் சிவபெருமானுக்கு கட்டப்பட்ட கோயிலாகும்.
நமது தமிழ்நாட்டில் சிவபெருமான் சிவபெருமானுக்கு என்ன முடியாதா அளவிற்கு கோயில்கள் உள்ளன. இன்றளவும் அந்தக் கோயில்கள் வரலாற்றை தாங்கி நிற்கின்றன. சிவபெருமானுக்கு பூதங்களால் கட்டப்பட்ட கோயில் குறித்து பெரும்பாலானார் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தக் கோயில் மிகவும் சிறியது ஸ்ரீபெரும்புதூர் என்றால் நம் நினைவுக்கு வருவது ராமானுஜர் ஆலயம் தான் ஆனால் அதே ஊரில் சிவன் பெருமாள் ஆலயம் உள்ளது. சைவமும் வைணவமும் இணைந்து இருப்பதற்கு இந்த இரு கோயில்களே சாட்சி ஆகும். எனவே இப்பதிவில் இந்தக் கோயிலின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒரு முறை ஆனந்த தாண்டவத்தின் போது சிவபெருமானின் ஆடைகள் நெகிழ்ந்தது. அதனைக் கண்ட பூதக்கணங்கள் சிரித்ததால், சிவபெருமான் கோபம் கொண்டு கையிலாத்தை விட்டு பூதக்கணங்கள் அகலமாறு உத்தரவு பிறப்பித்தார். பின் தங்கள் தவறை உணர்ந்த பூதக்கணங்கள் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தனர். இதனால் மனம் மாறிய சிவபெருமான் பூதக்கனங்களுக்கு காட்சி அளித்து அவர்களது தவறை மன்னித்தார்.
சிவபெருமான், தாங்கள் செய்த தவறை மன்னித்ததால் அவருக்கு கோயில் எழுப்ப பூதக்கணங்கள் விரும்பினர். எனவே சிவபெருமானின் அனுமதியுடன் பூதக்கணங்கள் கோயில் எழுப்ப முயன்ற போது தடைகள் வந்தது. இதனால் பூதக்கணங்கள் அந்த தடையை நீக்க முதலில் ஜெயபூத விநாயகர் ஆலயம் கட்டினர். அதன் பின்னரே, சிவபெருமானுக்கு இந்த கோயிலை கட்டி எழுப்பினர்.
இதையும் படிங்க: புரிதல் இல்லாத கணவன் மனைவி பிரியாமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரங்கள்!!
பூதகணங்கள் கட்டி எழுப்பிய அந்த கோயில்தான் தற்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பூதபுரீஸ்வரர் கோயிலாக திகழ்கிறது. இந்த இடம் பூதங்களால் உருவாக்கப்பட்டதால் பூதபுரி என்றும், பஞ்சபூதங்கள் வழிபடுவதால் பூதூர் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள இந்த கோவிலில் சவுத்ரி நாயகி, ராஜகணபதி, வள்ளி, தெய்வானை, முருகன், ஹனுமன், துர்க்கை, பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இந்தக் கோயில் மிகவும் சிறியது தான் ஆனால் இதன் கட்டிடக்கலை வியக்க வைக்கும். ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி உத்திரத்திம் அன்று திருக்கல்யாண உற்சவமும், தேர் திருவிழாவும் நடக்கிறது.