Shiva Lingam Changing Five Colors: நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கும் அற்புதத்தை கொண்ட சிவலிங்கம். சிவலிங்கத்தில் வண்டு உழைத்துள்ளது‌ அற்புதக் காட்சி. மக நட்சத்திரங்களுக்கு சிறந்த கோயிலாக இந்த திருநல்லூர் கிராமத்தில் உள்ள பஞ்சவர்ணேசுவரர் கோயில்

தினமும் காலையில் இருந்து இரவு வரை நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கும் அற்புதத்தை கொண்ட சிவலிங்கம். சிவலிங்கத்தில் வண்டு உழைத்துள்ளது‌ அற்புதக் காட்சி. மக நட்சத்திரங்களுக்கு சிறந்த கோயிலாக இந்த திருநல்லூர் கிராமத்தில் உள்ள பஞ்சவர்ணேசுவரர் கோயில். முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். கும்பகோணம் அருகே உள்ள திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் மூலவரின் பெயர் பஞ்சவர்ணேஸ்வரர் . மூலவர் சிவலிங்க வடிவம் உடையவர் சிவலிங்க கோயில் ஆகும். இவர் தினமும் ஐந்து முறை நிறம் மாறும் அதிசய லிங்கம் உள்ள தலமாகும்; இங்குள்ள சிவலிங்கம் காலை முதல் மாலை வரை சில வண்ணங்களில் மாறி பக்தர்களுக்குக் காட்சி தருகிறது, இது அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கம் எனப்படுகிறது.

விருச்சிக ராசிக்கு அதிஷ்டம் தரும் பரிகார கோயில்; தடைகள் நீங்கி வெற்றி பெற எளிய வழி!

அகஸ்தியர் கண்ட திருமண காட்சி:

எம்பெருமான் சிவன் - பார்வதி திருமணம் இமயமலையில் வைத்து நடைபெற்றது. திருமணத்தில் அகத்திய பார்க்க வில்லையாம் அதனால் எம்பெருமான் சிவன் மற்றும் பார்வதி திருமணத்திற்கு உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் திரண்டன. இதனால் வட திசை தாழ்ந்தது. தென் திசை உயர்ந்தது. உலக சமநிலை மாறுவதை சமப்படுத்த அகஸ்தியரை தென் திசைக்கு செல்லும் படி இறைவன் கட்டளையிட்டார்.

உன் பக்தன் எனக்கு மட்டும் தங்களின் திருமணத்தை காண ஆவல் இருக்காதா என கேட்டு வருத்தப்பட, இறைவனின் திருமணக் காட்சியை இந்த தலத்தில் காட்டி அருளினார்.இந்த திருமணக் கோலத்தில் இருக்கும் சிவன் பார்வதியையும் முன் அகஸ்தியர் மற்றொரு சிவ லிங்கத்டை வைத்து பூஜித்து பேறு பெற்றார்.இந்த கல்யாணசுந்தரேஸ்வரர் சிவ லிங்கத்திற்கு பின் இன்றும் கல்யாணசுந்தரேஸ்வரர் - பார்வதி சிலையை காண முடியும்.

தீராத கடன் மற்றும் பயம் போக்கும் சக்தி வாய்ந்த தலம்; ஸ்ரீ கால பைரவர் வழிபாடு!

மகம் நட்சத்திரத்திர கோயில்:

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கோயில் வழிபடுவது சிறப்பு. சுகப்பிரசவம் நடக்க இந்த கோயிலில் கர்ப்பிணிப் பெண்கள் வழிபாடு நடத்துகின்றனர். அதே போல் நினைத்த காரியம் சித்தி அடைய வழிபட வேண்டிய சிறப்பான கோயில் இதுவாகும். மக நட்சத்திரத்தில் ஏதேனும் பிரச்சனை கிரக தோஷங்கள் இருந்தால் இந்த கோயிலில் சென்று வழிபட்டு வந்தால் இரவில் நல்லதே நடக்கும் என்று நம்பப்படுகிறது.

லிங்கத்தின் மீது துளைகள்:

பிருங்கு முனிவர் வண்டு வடிவில் வந்து இறைவனை வழிபட்ட திருத்தலம் வண்டு வடிவில் இறைவனை வலம் வந்து வழிபட்டார். இதன் காரணமாக இந்த சிவலிங்கத்தின் மீது சில துளைகள் காணப்படுகின்றன. தற்போது திருவெண்டுறை என அழைக்கப்படுகிறது.

தேய்பிறை அஷ்டமி சிறப்பு! கண்டிக்குப்பம் பைரவரை ஒருமுறை தரிசித்தால் தலையெழுத்தே மாறும் அதிசயம்!

நிறம் மாறும் சிவலிங்கம்:

இங்கு வில்வ மரத்தடியில் இறைவன் சுயம்புவாக தோன்றினார். பொன் நிறமாக இருக்கும் சிவலிங்கம், தினமும் வெவ்வேறு வேளைகளில் ஐந்து நிறங்களில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். காலையில் 6:00 மணியில் இருந்து காலை 8.24 மணியளவில் தாமிர நிறமாகவும் 8.24 மணியிலிருந்து 10. 48 மணியளவில் இளஞ்சிவப்பு நிறத்திலும் காலை 10.48 இருந்து பிற்பகல் 1. 12 மணி அளவில் தங்க நிறமாகவும் 1.12 மணியிலிருந்து3.36 வரை நவரத்தின பச்சை நிறத்திலும் மாலை 6.00 அளவில் சொல்லத் தெரியாத வர்ணத்தில் சிவபெருமான் காட்சியளிக்கிறார் ஐந்து நிறங்களில் சிவலிங்கமானது மக்களுக்கு அருள் பாலிக்கிறார்.

குரு பெயர்ச்சிக்கு முன் செல்ல வேண்டிய சிவன் கோயில்: எந்த கோயில் தெரியுமா? போரூர் ஸ்ரீ இராமநாதீஸ்வரர் கோயில்!

பலன்கள்:

இங்கு சிவலிங்கமானது ஐந்து நேரங்களில் மாறி மாறி நிறம் மாறுவதனால் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாகவும் இருக்கிறது இந்த இத்தகைய கோயில் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற பெருமை இங்கு உள்ளது சிவலிங்கத்தை தர்ஷத் தேர்வு மூலம் நமக்கு உடலில் இருக்கும் நோய் பிணிகள் தீரும் என்று கூறப்படுகிறது அது மட்டும் அல்லாமல் அவருக்கு சுந்தரேசுவரர் என்று மற்றொரு பெயரும் உண்டு இங்கே அகத்தியருக்கு திருமண காட்சியளித்ததால் திருமணத்தில் தடை இருப்பவர்களும் திருமணம் நடைபெறாமல் இருப்பவர்களும் இந்த கோயிலுக்கு வந்து சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மக நட்சத்திரக்காரர்களுக்கு இது ஒரு சிறந்த கோயிலாக கருதப்படுகிறது. உலகத்தில் எதுவும் பிரச்சனை இருந்தால் இங்கு வந்து சென்றால் விரைவில் அது தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.