Asianet News TamilAsianet News Tamil

சபரிமலை சீசன் தொடங்கியாச்சு! குவியும் பக்தர்கள்.. 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வருகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

sabarimala season 8 special trains for ayyappan temple in kerala mks
Author
First Published Nov 24, 2023, 12:57 PM IST | Last Updated Nov 24, 2023, 2:20 PM IST

உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்ற கோயில் சபரிமலை, இது கேரளாவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு வருவார்கள். இந்நிலையில் கோவிலின் மண்டல பூஜைக்காக கடந்த 17ம் தேதி நடை திறக்கப்பட்டது. நாம் ஒரு நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலின் நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

கார்த்திகை 1ம் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். இப்படி விரதம் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிப்பதற்காக
சபரிமலைக்கு குவிந்து வருகின்றனர். இதனால் பக்தர்களின் வசதிக்காக, திருவாங்கூர் தேவஸ்தானம் போது சாமி தரிசனம் செய்யும் நேரத்தை அதிகரித்துள்ளது. அதன்படி காலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 <

>

இந்நிலையில், சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இப்போது அது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு இரயில்கள்:

டிசம்பர் 8 மற்றும் ஜனவரி 12, 19 - பிற்பகல் 3 மணிக்கு
டிசம்பர் 24, 31 - மாலை 4.30 மணிக்கும்
ஜனவரி 7 - மாலை 4.30 மணிக்கு
ஜனவரி 10, 17 - மாலை 4.00 மணிக்கு
ஜனவரி 14 - பிற்பகல் 2. 40 மணிக்கு சிறப்பு இரயில்கள் இயக்கப்படும்.

மறு மார்க்கமாக கொல்கத்தாவில் இருந்து செகந்திராபாத்துக்கு:
டிசம்பர் 9 மற்றும் ஜனவரி 13, 20 - இரவு 11 மணிக்கு
டிசம்பர் 26 மற்றும் ஜனவரி 2, 9, 12, 19, 16 - நள்ளிரவு 2.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க:  சென்னை டூ சபரிமலைக்கு நவம்பர், டிசம்பர் மாதத்தில் சிறப்பு ரயில்கள்.! முன் பதிவு எப்போது.?- தெற்கு ரயில்வே

விஜயவாடாவில் இருந்து கோட்டையத்திற்கு:
டிசம்பர் 1, 8, 29 மற்றும் ஜனவரி 12, 19 - இரவு 10.50 மணிக்கு
டிசம்பர் 15, 22 மற்றும் ஜனவரி 5 - மாலை 4.25 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மறு மார்க்கமாக கோட்டயத்தில் இருந்து விஜயவாடாவுக்கு:
டிசம்பர் 3, 10, 17, 24, 31 மற்றும் ஜனவரி 7, 14, 21 - நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ஆந்திரா, நர்சாபூரில் இருந்து கோட்டயத்துக்கு:
டிசம்பர் 10 ,17, 24, 31 மற்றும் ஜனவரி 7, 14 ஆகிய தேதிகளிலும், மறு மார்க்கமாக டிசம்பர் 11, 18, 25 மற்றும் ஜனவரி 8, 15 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில்கள் அனைத்தும் ரேணிகுண்டா காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு திருப்பூர் பாலக்காடு கோவை திருச்சூர் வழியாக இயக்கப்படும் இதற்கான டிக்கெட்டை இன்று (நவ.24) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios