திருப்பதி பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் வைப்பதற்கு இப்படி ஒரு கதை இருக்கா..?!
Green Camphor In Tirupati Perumal Jaw : திருப்பதி பெருமாளின் தாடையில் பச்சை கற்பூரம் சாத்தப்படுவதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான ஆன்மீக கதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார கடவுள் என்று அழைக்கப்படுகிறது. பெருமாளை தரிசித்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். திருப்பதி சென்று வந்தால் திருப்தி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுபோல, திருப்பதியில் இருக்கும் பெருமாளை தரிசித்து வந்தால், வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் நடக்குமாம்.
ஆந்திரா மாநிலம் திருப்பதி என்ற ஊரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. பெருமாளை தரிசிக்க இந்த கோவிலுக்கு பல கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது உண்டு. கோவிந்தா கோவிந்தா என்ற முழுக்குமிட்டு திருப்பதியில் இருக்கும் ஏழுமலையானை பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். உங்களுக்கு தெரியுமா.. திருப்பதி பெருமாளின் தாடையில் பச்சை கற்பூரம் சாத்தப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது ஏன் தெரியுமா..? அதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான புராணக்கதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
திருப்பதி பெருமாளின் தாடையில் பச்சை கற்பூரம் இருப்பது ஏன்?
ஸ்ரீ ராமானுஜரின் சீடர் ஆனந்தாழ்வார். இவர் பெருமாளின் பக்தராவார். வெங்கடேஸ்வரரின் இருப்பிடமான திருமலையில் வெங்கடேச பெருமாளுக்கு மலர் தோட்டம் எழுப்பும் படி ஆனந்தாழ்வாரிடம் ஸ்ரீராமானுஜர் உத்தரவிட்டார். அதன்படி, ஆனந்தாழ்வார் தனது கர்ப்பிணி மனைவியுடன் திருமலைக்கு சென்றார். பின் திருப்பதிகள் தங்கி பெருமாளுக்கு தோட்டம் ஒன்று அமைத்தும் முடித்தார். மேலும் மழைக்காலத்தில் மழை நீரை சேமித்தால் தோட்டத்திற்கு உதவியாக இருக்கும் என்று எண்ணிய அவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் அங்கே குளத்தை வெட்டினார்.
இதையும் படிங்க: இந்த 3 ராசிக்காரங்க திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போகவே கூடாதாம்!! மீறி போனால் அவ்வளவுதான்!!
ஆனந்தாழ்வார் சிரமத்தை எண்ணிய பெருமாள் சிறுவனின் உருவத்தில் வந்து ஆனந்தாழ்வாருக்கு உதவ முன் வந்தார். ஆனால், ஆழ்வார் பெருமாளுக்கு தான் மட்டும் தான் சேவை செய்ய வேண்டும், தனது பணியை யாரும் செய்யக்கூடாது என்று எண்ணத்தில், சிறுவனின் உதவியை மறுத்துவிட்டார். ஆனால் சிறுவனின் உருவத்தில் இருந்த பெருமாள் ஆனந்தாழ்வாருக்கு தெரியாமல், அவரது கர்ப்பிணி மனைவிக்கு உதவி செய்து வந்திருந்தார். இதை கண்ட ஆனந்தாழ்வார் கோபமடைந்து சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் சிறுவனின் தாடையில் இருந்து இரத்தம் வந்தது. பின் செல்வன் அங்கிருந்து ஓடி விட்டான்.
இதையும் படிங்க: 30 நிமிடத்தில் இலவச தரிசனம்... ரூ.20-க்கு 2 லட்டு.. 'ஸ்பெஷல் ஸ்டாட்' ஒதுக்கிய திருப்பதி தேவஸ்தானம்!
சிறுவனை அடித்து விட்டோமே என்ற வேதனையில் அனந்தாழ்வார் பெருமாளை பார்க்க கோயிலுக்கு சென்று அப்போது பெரும்பாலும் தாடையில் ரத்த வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனக்கு உதவ முன் வந்தது பெருமாள் தான் என்று அறிந்து கொண்டார். பிறகு, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, பச்சை கற்பூரத்தை கொண்டு பெருமாளின் தாடையில் வடியும் இரத்தத்தை நிறுத்தினார். உடனே இரத்தம் நின்று விட்டது, பெருமாள் ஆனந்தாழ்வாரை மன்னித்து விட்டார்.
இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் தான், திருப்பதி பெருமாளின் தாடையில் பச்சை கற்பூரம் சாத்தப்படுகிறது. மேலும் திருப்பதிக்கு நீங்கள் சென்றால் அனந்தாழ்வார் பயன்படுத்திய கடப்பாறை பிரதான வாயிலின் வலது புறத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதுபோல அனந்தாழ்வார் தோன்றிய குளம் 'அனந்தாழ்வார் குளம்' என்ற பெயரில் உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D