சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிடக்கூடாதாம்! அது ஏன் தெரியுமா?

Shivalingam Prasad : சிவலிங்கத்திற்கு வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுகின்றது. அது ஏன்? அதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

reasons behind why shiva lingam prasad should not be eaten in tamil mks

சிவலிங்கம் சிவனின் வடிவமாக கருதப்படுகிறது. நம்பிக்கைகளின் படி, ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிவலிங்கத்தை வழிபாடு செய்தால், மிகவும் மங்களகரமான பலன்களை பெறலாம். பலர் தங்களது வீடுகளில் சிவலிங்கத்தை வைத்து அதற்கு தினமும் வழிபாடு செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், சிவலிங்கத்தின் மீது பிரசாதமாக வழங்கப்படும் உணவை சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? என்பதை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

சிவலிங்கத்திற்கு வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடலாமா?:

பொதுவாகவே, எல்லா தெய்வ வழிபாட்டின் போது வழங்கப்படும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டு சாப்பிடப்படுகிறது. ஆனால், சிவலிங்கத்திற்கு வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது. அது ஏன்? அதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  சிவனை வழிபட உகந்த கிழமை எது தெரியுமா? புராணங்கள் சொல்லும் உண்மை என்ன?

புராணக்கதை : 

சிவபெருமானின் வாயிலிருந்து பேய்களின் தலைவனாக கருதப்படும் சண்டேஷ்வர் என்ற கணன் தோன்றியதாக சிவபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், சிவலிங்கத்தின் மீது வழங்கப்படும் பிரசாதம் சண்டேஸ்வரருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது. எனவே, சிவலிங்கத்திற்கு வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடுவது பேய்களிடமிருந்து உணவு எடுப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. இதனால் தான் சிவலிங்கத்திற்கு வழங்கப்படும் பிரசாதம் சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  இந்த ஒரு சிவன் கோயில் 1000 சிவன் கோயிலுக்கு சமம்.. எங்க இருக்கு  தெரியுமா...?

இவற்றின் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் :

  • இந்து மத நூல்களின் படி, களிமண், கல் மற்றும் பீங்கான் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிவலிங்கத்தின் மீது வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடக்கூடாது இது சண்டேஸ்வரனுக்கு உரியதாகும்.
  • உலோகம் அல்லது பாதரசத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு நீங்கள் உணவு அளித்து இருந்தால் அதை பிரசாதமாக ஏற்றுக் கொள்ளலாம் இதில் எந்த தவறும் இல்லை. சிவபுராணத்தின் படி, இந்த பிரசாதம் எண்ணற்ற பாவங்களை அழிக்கிறது.

பிரசாதம் தொடர்பான முக்கிய விதிகள் : 

சிவலிங்கத்திற்கு சில பொருட்களை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதில் துளசி, பருப்பு மற்றும் மஞ்சள் ஆகியவை அடங்கும். அதுபோல, சிவலிங்க பிரசாதத்தை பித்தளை அல்லது வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதை ஒருபோதும் தரையில் வைக்கக்கூடாது. பூஜை முடிந்ததும் இந்த பிரசாதத்தை இறைவனிடம் சேர்க்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios