Asianet News TamilAsianet News Tamil

இந்து திருமணங்களில் மணமகளுக்கு கருப்பு நிற வளையல் அணிவிக்கப்படுவது ஏன்?

திருமணத்தின் போது மணப்பெண்கள் கருப்பு நிறத்தில் எதையும் அணிவது கிடையாது. ஆனால் சில இடங்களில் திருமணத்தின் போது மணமகள் கருப்பு வளையல் அணிவார்கள். அதற்கான காரணம் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

reason for brides wearing black bangle even on an auspicious occasion like marriage
Author
First Published Nov 13, 2022, 1:27 AM IST

இந்து திருமணங்களில் பல பழக்கவழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. சில பழக்கவழக்கங்கள் பல நூற்றாண்டுகளாக மக்களால் பின்பற்றப்படுகின்றன. ஆனால் அதனுடைய உண்மையான பலன்கள் குறித்து பலருக்கும் தெரிந்திருப்பது கிடையாது. எனினும் பெரும்பாலான திருமண நடைமுறைகளில், பெண்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்களில் பெரிய மாறுதல்கள் இருக்காது. அந்தவகையில் திருமணத்தின் போது மணமகள் கருப்பு வளையல்களுடன் சிவப்பு வளையல்களை அணிவிக்கப்படுவது மரபு. இந்து மதத்தில் கருப்பு நிறம் என்பது அமங்கலமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருமணத்தின் போது மணப்பெண்கள் கருப்பு நிறத்தில் எதையும் அணிவது கிடையாது. ஆனால் சில இடங்களில் திருமணத்தின் போது மணமகள் கருப்பு வளையல் அணிவார்கள். அதற்கான காரணம் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

கருப்பு வளையல் அணிவதற்கான காரணங்கள்

வட இந்தியாவில் பல இடங்களில் மணப்பெண் கருப்பு நிற வளையல் அணிவதைக் காணலாம். சிவப்பு வளையங்களுக்கு இடையில் கருப்பு வளையல்கள் அவர்களுக்கு அணிவிக்கப்படும். மணமகள் மீது யாரும் கண்ணு வைத்துவிடாமல் இருக்க கருப்பு வளையல்கள் அணிவிக்கப்படுகின்றன. ஒருசிலர் கணவரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக மணமகளுக்கு கருப்பு வளையல் அணிவித்துவிடுகின்றனர். கருப்பு இருண்டது. உறவை ஆழப்படுத்த உதவுகிறது. எனவே மணமகள் அணிவதில் சில நல்ல காரியங்களும் உள்ளன.

கருப்பு வளையல் எவ்வளவு நேரம் அணியலாம்?

புது மணப்பெண்கள் சுமார் 6 மாதங்களுக்கு கருப்பு வளையல்கள் அணிவார்கள். இந்த 6 மாதங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை அவர்கள் வளையல்களை மாற்ற வேண்டும். வளையலை மாற்றுவதற்கு முன் வளையல் உடைந்தால், எதிர்மறை ஆற்றல் அழிக்கப்பட்டது என்று அர்த்தம். புதிய கருப்பு வளையலை மாற்றிய பின் பழைய கருப்பு வளையலை வேறு எந்த பெண்ணுக்கும் கொடுக்க கூடாது. அதை வயல்வெளிகள் அல்லது ஆற்றுப் படுகையில் தூக்கிப் போட்டுவிட வேண்டும்

சனி பகவான் அருள் பெறுவதற்கு இதைச் செய்யுங்கள் போதும்..!!

எதிர்மறை ஆற்றலை நீக்கும் இரும்பு வளையல்

சில இடங்களில், மணமகளுக்கு இரும்பு வளையல் அல்லது இரும்பு வளையம் போடப்படுகிறது. இரும்பு சனியின் அடையாளமாக இருப்பதால், எதிர்மறை ஆற்றலை நீக்குவதாக நம்பப்படுகிறது. கருப்பு மற்றும் நீலம் சனியைக் குறிக்கின்றன. வழிபாட்டின் போது இந்த நிறம் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இந்த இரண்டு நிறங்களும் அமலங்களமானது இல்லை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

கருப்பு கண்ணாடி வளையல்கள் தான் நல்லது

இந்து மதத்தில் கண்ணாடி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. எனவே கருப்பு வளையல் அணிந்தால் அது எதனால் ஆனது என்பதில் கவனம் செலுத்துங்கள். கண்ணாடியால் செய்யப்பட்ட கருப்பு வளையல்களை மட்டும் அணியுங்கள். உலோகம் அல்லது பிளாஸ்ட்டியால் செய்யப்பட்ட கருப்பு வளையல்களை அணிய வேண்டாம்
 

Follow Us:
Download App:
  • android
  • ios