Power of Pathalam Sembu Murugan Temple In Life: நம் வாழ்வில் ஏற்றம் இறக்கம் இருப்பது சாதாரணம் தான் ஆனால் முருகன் அன்றே கணித்தார் என்றே கூறலாம். பாதாள செம்பு கோயில் கீழே இறங்கி மேலே ஏறுவது கோயிலின் சிறப்பு என்று கூறப்படுகிறது.
கோவிலின் அமைவிடம்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே, ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. பாதாளத்தில் பூமிக்கு அடியில், செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் பாதாள செம்புமுருகன் என்ற பெயர் உருவானது. பாதாளத்தில் உள்ள கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறி இறங்கிச் செல்கின்றனர்.
பாதாள செம்பு முருகன் உருவாகிய வரலாறு:
பழனி முருகன் கோவிலில் நவபாஷாண சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் மறு அவதாரமாக, திருக்கோவிலூர் சித்தர் கருதப்படுகிறது. போகர் சித்தரையும் அவருடைய சீடர் புலிப்பாணியையும் மானசீக குருவாக போற்றி பூஜித்து வந்தவர் தான் திருக்கோவிலூர் சித்தர். இவர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமலிங்கம்பட்டியில் வசித்து வந்தார். இவர் 1 அடி உயரத்தில் முருகன் சிலையை உலோகத்தால் வடிவமைத்து பாதாள அறையில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார். நாளடைவில் வழிபாடின்று போன இந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரம் சமஸ்தானத்தில் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியின் வம்சாவளியை சேர்ந்த கந்தமாறன் என்ற மிராசுதாரர், மீண்டும் பூஜைகள் நடைபெற செய்தார்.அதன் பின்னர் இக்கோயில் உலக அளவில் போற்றப்படுகிறது.
கோவிலின் சிறப்புகள்:
1. திருநீறு:
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது இக்கோயில் வழங்கப்படும் திருநீறு யானை சாணம் மாட்டு சாணம் நறுமணப் பொருட்கள் மருத்துவ பொருட்கள் 18 வகையை உள்ளடக்கியதாக உள்ளது இதை அனைத்தையும் வெயிலில் உலர்த்தி பொடித்து அதில் விபூதி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது இதை செய்வதற்கு ஏழு மாதங்கள் வரை ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.
2.கருங்காலி மாலைகள்:
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கருங்காலி மாலை பிரசாதமாக வழங்கப்படுகிறது.கருங்காலி மாலைகளை, முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் கருங்காலி வேல், சந்தன வேல் ஆகியவற்றை முருகனுக்கு சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
