நாளை பங்குனி உத்திரம்! முருகனுக்கு விரதம்.. குலதெய்வ வழிபாடு.. பலன்கள் இவ்வளவா!! எப்படி வழிபட வேண்டும்?

panguni uthiram viratham 2023 | பங்குனி உத்திர நாளில் குல தெய்வத்தை வழிபட்டால் இரண்டு மடங்கு நன்மைகளை பெறலாம். எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.  

panguni uthiram viratham 2023 viratham benefits and  kuladeiva valipadu

பங்குனி உத்திரம் என்றால் முருகன் தான் எல்லோரின் நினைவிலும் வருவார். இது முருகனுக்கு உரிய விரதநாள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். இந்த நாளில் குலதெய்வத்தை வழிபட்டாலும் இரட்டிப்பு நன்மைகளை அனுபவிக்கலாம். தமிழ் மாதம் 12ஆவது மாதம் பங்குனியும், 12ஆவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் சிறப்பான நாள் பங்குனி உத்திரம். இந்த நாளின் புராண கதையும், விரதமுறையும் வழிபாட்டு பலன்களும் இங்கு காணலாம். 

பங்குனி உத்திரம் வழிபாட்டு நேரம் 

நாளை (ஏப்ரல் 5ஆம் தேதி) பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. உத்திர நட்சத்திரம், இன்று காலை 10.29 மணி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி பிற்பகல் 12.09 மணி வரை உள்ளது. இன்றே உத்திரம் நட்சத்திரம் தொடங்கினாலும் பெளர்ணமியும், உத்திர நட்சரத்திரமும் சேரும் தினமான நாளை தான் பங்குனி உத்திரம் என கருதப்படுகிறது. நாளை பெளர்ணமி திதி காலை 10.17 மணிக்கும் தொடங்கி ஏப்ரல் 06ஆம் தேதி காலை 10.58 மணி வரைக்கும் இருக்கிறது. 

சிவன், பார்வதி தேவி மண நாளை பங்குனி உத்திரம் என புராணங்கள் சொல்லுகின்றன. இதே தினத்தில் தான் முருகன்- தெய்வானைக்கும், ராமன் - சீதைக்கும் ரங்கமன்னார் - ஆண்டாளுக்கும் கூட திருமண வைபவம் நடந்தது என புராணங்கள் சொல்கின்றன. தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற சிறப்பான நாள் பங்குனி உத்திரம் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர். இந்த நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபட்டால் அரசு வேலை உள்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

பங்குனி உத்திர முருகன் வழிபாடு பலன்கள் 

பங்குனி உத்திரம் அன்று முருகனுக்கு விரதம் இருந்து வழிபட்டால், கடன் தொல்லை விலகும். வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் வரும். செல்வம் பெருகும். வீட்டில் தடையான நல்லகாரியங்கள் எளிதாக முடியும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசு வேலை முயற்சி செயவர்கள் விரதமிருந்து வழிபடலாம்.  

இதையும் படிங்க: பங்குனி உத்திரம் வழிபாடு பலன்கள் முழுதகவல்கள்.!

panguni uthiram viratham 2023 viratham benefits and  kuladeiva valipadu

குலதெய்வ வழிபாடு 

குலதெய்வங்களாக வழிபடும் சாஸ்தா, அய்யனார் கோயிலுக்கு சென்று பங்குனி உத்திரம் அன்று வழிபடலாம். பங்குனி உத்திரம் பௌர்ணமியில் கொண்டாடப்படுவதால் கூடுதல் சிறப்பு. நாளை பங்குனி உத்திரம் நாளில் உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று நல்லெண்ண்யெ தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் கோடி கிடைக்கும். ஒருவேளை குலதெய்வ கோயிலுக்கு உங்களால் போக முடிவில்லை எனில் வீட்டு பூஜை அறையில் உள்ள குலதெய்வத்துக்கு நைவேத்தியம் படையல் போட்டு மனமுருகி வழிபாடு செய்துவிடுங்கள். 

இதையும் படிங்க: ஒருநாள் பங்குனி உத்திர விரதம் இருந்தால் இத்தனை பலன்களா! முருகன் அருளால் அரசு வேலை, பதவி உயர்வு கூட கிடைக்கும்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios