பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் இருக்கும் முருகன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சில முக்கிய கோவில்களில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

Panguni Uttara Vaibhavam 2025: Devotees Visit Temples in Tamil Nadu : பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனியில் 12வது நட்சத்திரமாகிய உத்திரத்துடன் பௌர்ணமி இணைந்து வரும் திருவிழாவாகும். இந்த நாள் முருகப் பெருமானுக்கு மிகவும் சிறப்பு நாள் என்பதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடத்தப்படும். இது தவிர இந்நாளில் முருக பக்தர்கள் விரதமிருந்து, பால்குடம், காவடி எடுத்து சென்று முருகனை வழிபடுவது வழக்கம்.

பங்குனி உத்திரம் நாளில் தான் சிவன்-பார்வதி, முருகன்-தெய்வானை, ராமர்-சீதா போன்ற கடவுள்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் சொல்லுகின்றன. இந்நாள் சைவர்களுக்கு மட்டுமல்ல, வைணவர்களுக்கும் மிக முக்கியமான நாள் தான். முக்கியமாக இந்நாளில் விரதமிருந்து வழிப்பட்டால் திருமண தடைகள் அனைத்தும் நீங்கி, வரன் கைக்கூடும் என்பது நம்பிக்கை.

இதையும் படிங்க: பழனி கோயில் பங்குனி உத்திர விழா.! பக்தர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு

பங்குனி உத்திரம் விரதம்:

திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் இந்நாளில் விரதமிருந்து முருகனை முழு மனதுடன் வழிப்படால் திருமண வரம் மட்டுமலு, நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைக்கூடும். ஒருவேளை உங்களால் முருகனை முழுமனதுடன் நினைத்து, முருகனுக்குரிய பாடலை பாடி, பூஜை செய்து வழிபடுங்கள். 

இதையும் படிங்க: தூத்துக்குடி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பங்குனி உத்திர திருநாள் விடுமுறை - முழுமையான விவரங்கள்!

பங்குனி உத்திரம் 2025?

இந்த 2025 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் இன்று (ஏப்.11) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. எனவே இந்நாளில் தமிழகம் முழுவதும் இருக்கும் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது.