Asianet News TamilAsianet News Tamil

இரவு நேரத்தில் ஏன் நகம் வெட்டக்கூடாது? குறிப்பாக இந்த நாளில் நகம் வெட்டுறது தான் அதிர்ஷ்டம்?

எந்த நாளில் நகம் வெட்டுவது அதிர்ஷ்டகரமானது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். 

most auspicious day for cutting nails
Author
First Published Jun 27, 2023, 10:47 AM IST

நமது ஆரோக்கியத்தில் விரல் நகங்களுக்கு பங்குண்டு. ஏனென்றால் அதை சரியாக பராமரிக்காவிட்டால் பாக்டீரியா, கிருமிகளின் கூடாரமாக மாறிவிடும். சில நோய்களும் பரவும். எப்போதும் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் மாலை நேரத்தில் நகங்களை வெட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என முன்னோர் தெரிவிக்கின்றனர். இதற்கு பின் இருக்கும் காரணங்கள், நகம் வெட்ட அதிர்ஷ்டகரமான நாள் குறித்து இங்கு காணலாம். 

மாலையில் நகம் வெட்டுவதால் வீட்டிற்கு மகாலட்சுமி வருவது தடைப்படும் என கூறப்படுகிறது. மாலை வேளையில் தான் லட்சுமி தேவி நம் வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகிறது. இதனால் வீட்டிற்கு செழிப்பும் செல்வமும் ஏற்படும். இரவில் கழிவுகளை அகற்றுவது லட்சுமிதேவியை அவமரியாதை செய்வது போன்றது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். ஆகவே இரவில் பணம் கடன் கொடுப்பது, நகம் வெட்டுவது, முடி வெட்டுவது போன்றவற்றை செய்யக்கூடாது.

முந்தைய காலங்களில் மின்சாரம் கிடையாது. அதனால் இருளில் நகம் வெட்டுவது சிரமமாக இருந்தது. அந்த நகத்தின் கழிவுகளை அப்புறப்படுத்துவதும் சற்று கடினம்தான். வெட்டிய நகங்கள் சுகாதாரம் இல்லாதவை. இது நம் உணவில் கலந்தால் ஒவ்வாமை ஏற்படலாம். வயிற்று பிரச்சனைகள் சரியாகும். இது போன்ற காரணங்களுக்காக இரவில் நகம் வெட்டுவதை தவிர்த்தார்கள். 

auspicious days for cutting nails in tamil

முந்தைய காலங்களில் நகம் வெட்ட, இப்போது இருப்பது போல நகவெட்டிகள் கிடையாது. கத்தியில் தான் நகம் வெட்டுவார்கள். மாலை வேளையில் இப்படி நகம் வெட்டுவதால் ரத்த காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இரவில் நகம் வெட்டுவது தவிர்த்தார்கள். நன்கு வெளிச்சமாக இருக்கும் பகலில் தான் நகம் வெட்டுவார்கள். 

உடைந்த நகம், சம்பந்தப்பட்ட ஆளுடைய துணியில் ஒரு பகுதி போன்றவை பயன்படுத்தியே சூனியம் வைப்பார்கள். இந்நிலையில் இரவில் நகம் வெட்டும் போது அது தரையில் விழுந்தால் கெட்ட சக்திகள் அல்லது நமக்கு எதிராக வைத்துள்ள சூனியத்தால் பாதிப்புக்கு ஏற்படும். 

இதையும் படிங்க: மறந்தும் கூட இந்த 4 பொருட்களை காலியாக வைக்காதீங்க... மீறினால் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யமாட்டாள்!!

நகம் வெட்ட ஏற்ற நாள்: 

ஜோதிட சாஸ்திரங்களின்படி, நகத்தை வெட்ட சிறந்த நாள் எது என்பதை விட இரவில் நகத்தை வெட்டக்கூடாது என்பதை தான் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். சனிக்கிழமை நாம் விடுவது உங்களுடைய மன உறுதியை குறைக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அந்த நாளில் நாம் வெட்டுவதை தவிர்க்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் நகத்தை வெட்டக்கூடாது. 

புதன்கிழமை நகம் வெட்டுவது உங்களுடைய பூர்வீக சொத்தை பெருக்க உதவுகிறது வியாழன் என்று நகம் வெட்டினால் கெட்ட விஷயங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும் வெள்ளிக்கிழமை நகம் வெட்டினால் உங்களுடைய விருப்பத்திற்குரியவர்களை சந்திப்பீர்கள். திங்கள்கிழமை நகம் வெட்டுவது உங்களுடைய உடல்நலத்தை மேம்படுத்தும். செவ்வாய் என்று நகம் வெட்டினால் கடன் சுமை குறையும்.  

இதையும் படிங்க: Vastu Tips: இந்த திசையில் ஒருபோதும் பீரோவை வைக்காதீங்க... பணம் நஷ்டம் ஏற்படும்..!!

Follow Us:
Download App:
  • android
  • ios