மதுரையில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட விநோத கோவில் திருவிழா!

மதுரையில் கோவில் திருவிழா ஒன்றில் ஆண்களுக்கு மட்டும் கருப்பு கிடா கறி விருந்து நடைபெற்றது. வினோத நம்பிக்கை ஒன்று இத்திருவிழாவில் உள்ளது. அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.

men only participated in madurai village temple festival

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சொரிக்காம்பட்டியில் உள்ள கரும்பாறை முத்தையா கோவிலில் நேற்றைய தினம் திருவிழா நடந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் அவர்களுக்கு கிடாக்கரி விருந்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தை  அல்லது மாசி மாதத்தில் நடைபெறும் இத்திருவிழா அறுவடைக் காலத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும். இந்த திருவிழாவிற்காக மக்கள் அனைவரும் கருப்பு கிடாக்களை காணிக்கையளிப்பர். இதனால் அது தானாக வளரும். இந்த கிடாக்கள் தோட்டங்களில் உள்ள பயிர்களை சாப்பிடும் போது மக்கள் கிடாக்களை விரட்டுவதில்லை. ஏனெனில் முத்தையா சாமியே வந்து சாப்பிடுவதற்காக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

இதையும் படிங்க: Birth on Amavasya: அமாவாசை அன்று குழந்தை பிறப்பது அசுபமா ? ஜோதிடம் கூறுவது என்ன?

இந்த ஆண்டு குறைவாக மழைப்பொழிந்தது. இதனால் தை, மாசி மாதத்தில் அறுவடை செய்ய முடியவில்லை. தற்போது தான் இந்த கோடையில் விவசாயம் செய்து அறுவடை முடிந்தது. அறுவடை முடிந்த கையோடு கருப்பாறை முத்தையா சாமிக்குத் திருவிழா எடுத்தனர். இத்திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி பூஜை செய்தனர்.

அதிகாலையிலே தொடங்கிய இந்த விழாவில்  20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆண்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டது. அவர்கள் உணவருந்திய பிறகு அந்த இலையை எடுக்கக் கூடாது. எனவே அதனை  அப்படியே விட்டுச்சென்றுவிடுவர். பின் இலைகள் காய்ந்த பின்னர்தான் இங்கு பெண்கள் வருவார்கள்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios