மாசி சங்கடஹர சதுர்த்தி விரதம்.. இன்று புது தாலிக்கயிறு மாற்றுங்க.. தீர்க்க சுமங்கலி வரம் பெறுங்கள்...

சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து மஞ்சள் கயிற்றை மாற்றி, வாழ்நாள் முழுவதும் தீர்க்க சுமங்கலியாக வாழும் வரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

masi sankatahara chaturthi 2024 date time viratham and its benefits in tamil mks

இந்து மதத்தில் விநாயகர் தான் எந்த ஒரு செயலின் தொடக்கம். அவரை வழிபட்ட பிறகு தான் தங்கள் காரியங்களை தொடங்குவார்கள். அதனால்தான் "ஆனைமுகத்தோனே ஆதிமூல கணபதி" என்று சொல்லுவார்கள். திங்கள், வெள்ளி தான் விநாயகருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.  திதிகளை எடுத்துக்கொண்டால், 'சதுர்த்த திதி' தான் அவருக்கு ஏற்றது என்பார்கள் நம் வீட்டு பெரியோர்கள். அதிலும், மாசி மாதம் வரும் 'சங்கடஹரா சதுர்த்தி' மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றே கூறலாம். வினை தீர்க்கும் விநாயகரே வணங்க ஏற்ற நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். எனவே, இந்நாளில் விநாயகரை மனதார வழிபட்டால் சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம்.

masi sankatahara chaturthi 2024 date time viratham and its benefits in tamil mks

சங்கடஹர சதுர்த்தி எப்போது?

சங்கடஹர சதுர்த்தி என்பது பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் ஆகும். குறிப்பாக, ஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாதத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மகா சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், மாசி மாத சங்கடஹர சதுர்த்தி பிப்ரவரி 28, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. எனவே இந்த நாளில் மாலை 4:30 மணி முதல் 5:30 மணிக்குள் தாலி இருக்கும் மஞ்சள் கயிற்றை மாற்றினால் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. மேலும், பௌர்ணமிக்கு அடுத்ததாக நான்காம் நாள் வரும் சதுர்த்தி திதியே, மாத சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லப்படுகிறது.

masi sankatahara chaturthi 2024 date time viratham and its benefits in tamil mks

2024 சங்கடஹர சதுர்த்தி விரதம்:
நம் வாழ்வில் இருக்கும் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியத்தை கொடுப்பது தான் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும். எனவே, இந்நாளில் காலையிலேயே நீராடி, விரதமிருந்து விநாயகரை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு இரவு பூஜை எல்லாம் முடிந்த பின், கணபதி கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தனியாக தூங்க வேண்டும். இதனால் உங்களுக்கு எல்லா விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிங்க:  சங்கடங்கள் போக்கி வரம் தரும் 'சங்கடஹர சதுர்த்தி' விரதம் முறை மற்றும் பலன்கள் இதோ..!!

2024 சதுர்த்தி விரத பலன்கள்:
சங்கடஹர சதுர்த்தி அன்று விரதமிருந்து வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். அதுவும் குறிப்பாக, மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று இருக்கும் விரதம் இருந்து விநாயகரை வழிப்பட்டால் உங்களது அனைத்து துன்பங்களை போக்கும் வல்லமை இதற்கு உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், மாசி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ, ஆவணி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ இருந்து வந்தால் விநாயகரின் அருளைப் பெறலாம் என்பது ஐதீகம்..

இதையும் படிங்க:  மாசி சங்கடஹர சதுர்த்தி 2024 : தேதி, விரத வழிபாடு மற்றும் பலன்கள் குறித்த தகவல்கள்!!

masi sankatahara chaturthi 2024 date time viratham and its benefits in tamil mks

மாசி தாலிக்கயிறு:
மாசி மாதம் சக்தி சிவத்தோடு ஐக்கியமாகிறது. எனவே, இம்மாதத்தில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்கள் நீண்ட ஆயுளோடு நிறைவான திருமண வாழ்வினைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. அதனால் தான், திருமணமானப் பெண்கள் இம்மாதத்தில் தாலிக்கயிற்றினை மாற்றிக் கொள்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சனி தோஷம் விலகும்:
அதுமட்டுமின்றி, சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடிப்பதால் தீராத நோய்கள் கூட தீருமாம். மேலும், வாழ்க்கையில் தொடர்ந்து பலவிதமான துன்பங்களை அனுபவித்தவர்களுக்கு நிலையான சந்தோஷம் கிடைக்கும். கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவகையான நன்மைகளை பெறுவார்கள். முக்கியமாக, சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த விரதத்தை கடைப்பிடித்தால் சனியின் தாக்கம் குறையும். எனவே, இன்று மாசி சங்கடஹர சதுர்த்தி என்பதால், விரதமிருந்து மஞ்சள் கயிற்றை மாற்றி, வாழ்நாள் முழுவதும் தீர்க்க சுமங்கலியாக வாழும் வரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios