கண்ணகி கோவிலில் சித்ரா பெளர்ணமி திருவிழா.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.. 

தமிழக, கேரள இரு மாநில எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் சித்ரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

Mangaladevi Kannagi temple chitra pournami festival large number of devotees participated Rya

ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமிக்கும் ஒரு சிறப்பு இருந்தாலும், சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தனிச்சிறப்பு வாய்ந்தது. இது சித்ரா பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சித்ரா பௌர்ணமி அன்று கோயில்களுக்கு சென்று புண்ணிய நதிகளில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். அந்த வகையில் இந்த ஆண்டின் சித்ரா பௌர்ணமி இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் தமிழக, கேரள இரு மாநில எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் சித்ரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழக - கேரள எல்லையில் தேக்கடி பெரியார் புலிகள் சரணலாத்தின் அருகே அமைபெற்றுள்ளது. மிகவும் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க மங்களாதேவி கண்ணகி கோவில் ஆண்டுதோறும் இங்கு பக்தர்கள் பொங்கள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கமாகும். அதன்படி இந்தாண்டும் மங்களாதேவி கோவிலில் பக்தர்கள் தங்கள் குடும்பந்தினருடன் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இதற்காக இருமாநில அரசுகளும் அனுமதிகளையும் வழங்கியது.

கோவிந்தா! கோவிந்தா! பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட! பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்!

இதனால் அதிகாலை 4- மணியளவில் கண்ணகி கோவிலுக்கு செல்ல அனுமதிகள் வழங்கப்பட்டது. வாகனங்களுக்கு பாஸ் போன்றவையும் வழங்கப்பட்டது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டன. இதனைதொடர்ந்து பக்தர்கள் வாகனங்களில்  பாதுக்காப்பாக சென்று பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

மங்களதேவி கண்ணகி கோவிலில் காலை 4 மணி முதல் மதியம் 2.30 மணிவரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மங்களாதேவி கண்ணகி கோவில் சித்திரை பௌணர்மியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சித்ரா பௌர்ணமிக்கு மட்டுமே இங்கு செல்ல முடியும்.. கண்ணகி கோயில் வரலாறு தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios