Asianet News TamilAsianet News Tamil

Shiva Lingam : சிவ வழிபாட்டிற்கு உகந்த 3 முக்கிய லிங்கங்கள்.!!

சிவ வழிபாட்டிற்கு உகந்த மூன்று முக்கிய லிங்கங்கள் பற்றிய இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளலாம்..

lord shiva worship 3 different types of shiva lingams for lingam worship in tamil mks
Author
First Published Apr 20, 2024, 8:28 PM IST

சிவன் இந்து மதத்தில் மிக முக்கிய கடவுளாக கருதப்படுகிறார். மிகவும் பிரபலமான சிவன் வழிபாடு 'லிங்க' வடிவில் உள்ளது. இது சிவலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. லிங்க சின்னம் என்பது உருவமற்றவர்களுக்கு வடிவம் கொடுப்பதாகும்.
 
பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் முந்தி முடியும் தொடக்கமும் இல்லாத 'அக்னித் தூண்' வடிவில் பிரம்மசிவன் தோன்றுதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட புராணம், லிங்க புராணம் போன்ற புராணங்களில் இந்த குறிப்பை காணலாம். பிரம்மன் உன்னதமான பல அடையாளங்களில் இதுவும் ஒன்று. எனவே, சிவனின் லிங்க வடிவம் பிரகாசமான ஒளியின் நெடுவரிசையைக் குறிக்கிறது. சரி.. இப்போது சிவ வழிபாட்டிற்கு உகந்த மூன்று முக்கிய லிங்கங்கள் பற்றிய இந்த பதிவில் நாம் காணலாம்..

சிவ வழிபாட்டிற்கு உகந்த 3 முக்கிய லிங்கங்கள்:

ஷணிக லிங்கம்: நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் எதுவென்றால், அது 'ஷணிக லிங்கம்' ஆகும். இது செய்வது மிகவும் எளிது. மேலும், இது 16 வகைப்படுகிறது. சொல்லபோனால், இதனை நாமே செய்யலாம். ஒருவேளை, குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

  • புற்றுமண் லிங்கம் - மோட்சம் தரும்.
  • ஆற்றுமண் லிங்கம் - பூமி லாபம் தரும்.
  • பச்சரிசி லிங்கம் - பொன், பொருள் தரும்.
  • அன்ன லிங்கம் - அன்ன விருத்தி தரும்.
  • பசுவின் சாண லிங்கம் - நோய்கள் தீரும்.
  • வெண்ணெய் லிங்கம் - மன மகிழ்ச்சி தரும்.
  • ருத்ராட்ச லிங்கம் - அகண்ட அறிவைத் தரும்.
  • விபூதி லிங்கம் - அனைத்து செல்வமும் தரும்.
  • சந்தன லிங்கம் - அனைத்து இன்பமும் தரும்.
  • மலர் லிங்கம் - ஆயுளை அதிகமாக்கும்.
  • தர்ப்பைப்புல் லிங்கம் - பிறவியிலா நிலை தரும்.
  • சர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பம் தரும்.
  • மாவு லிங்கம் - உடல் வன்மை தரும்.
  • பழ லிங்கம் - சுகத்தைத் தரும்.
  • தயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும்.
  • தண்ணீர் லிங்கம் - எல்லா மேன்மைகளும் தரும்.

இதையும் படிங்க:  தினமும் 3 முறை நிறம்மாறும் அதிசய சிவலிங்கம்.. இந்தியாவின் மர்மமான இந்த சிவன் கோவில் பற்றி தெரியுமா?

 இஷ்ட லிங்கம்: இஷ்ட லிங்கம் என்பது மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று, தன் ஆயுள் இருக்கும் வரை தன்னிடமே வைத்துக்கொண்டு, தினமும் செல்லும் இடம் எல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் தான் 'இஷ்ட லிங்கம்' எனப்படும்.

  • இந்திரன் - பத்மராக லிங்கம்.
  • குபேரன் - ஸ்வர்ண லிங்கம்.
  • யமன் - கோமேதக லிங்கம்.
  • வருணன் - நீல லிங்கம்.
  • விஷ்ணு - இந்திர நீல லிங்கம்.
  • பிரம்மன் - ஸ்வர்ண லிங்கம்.
  • அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் - வெள்ளி லிங்கம்.
  • வாயு - பித்தளை லிங்கம்.
  • அசுவினி தேவர்கள் - மண் லிங்கம்.
  • மகா லட்சுமி - ஸ்படிக லிங்கம்.
  • சோம ராஜன் - முத்து லிங்கம்.
  • சாதுர்யர்கள் - வஜ்ஜிர லிங்கம்.
  • பிராம்மணர்கள் - மண் லிங்கம்.
  • மயன் - சந்தன லிங்கம்.
  • அனந்தன் முதலான நாகராஜர்கள் - பவள லிங்கம்.
  • தைத்தியர்கள், அரக்கர்கள் - பசுஞ்சாண லிங்கம்.
  • பைசாசங்கள் - இரும்பு லிங்கம்.
  • பார்வதி - வெண்ணெய் லிங்கம்.
  • நிருதி - தேவதாரு மர லிங்கம்.
  • யோகிகள் - விபூதி லிங்கம்.
  • சாயா தேவி - மாவு லிங்கம்.
  • சரஸ்வதி - ரத்தின லிங்கம்.
  • யட்சர்கள் - தயிர் லிங்கம்.

இதையும் படிங்க:  1300 வருடங்கள் பழமையான காலகாலேஸ்வரர் திருத்தலம்- மணல் லிங்கமாக காட்சியளிக்கும் ஈசன்!

ஆத்ம லிங்கம்: ஆத்ம லிங்கம் என்பது தூய மனதுடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் தான் 'ஆத்ம லிங்கம்' ஆகும். இந்த வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதும்; வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு தான் ஆத்ம லிங்க வழிபாடு என்று அழைக்கப்படுகிறது.

  • மண் - காஞ்சிபுரம் - ஏகாம்பர லிங்கம்.
  • நீர் - திருவானைக்கா - ஜம்பு லிங்கம்.
  • நெருப்பு - திருவண்ணாமலை - அருணாசல லிங்கம்.
  • வாயு - திருகாளத்தி - திருமூல லிங்கம்.
  • ஆகாயம் - சிதம்பரம் - நடராச லிங்கம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios