Asianet News TamilAsianet News Tamil

நீங்கள் என்னக் கலர் கயிறை கட்டி இருக்கிறீர்கள்? அதற்கு என்ன பலன் என்று தெரியுமா? 

எந்த விதமான கயிறை நாம் கையில் கட்டக் கொள்ள வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

Kaiyil Kayiru Kattuvathal Kidaikum Palangal
Author
First Published Mar 28, 2023, 11:02 AM IST

நம் ஒவ்வொரு திருத்தலங்களுக்கு செல்லும் போது அங்க சன்னதிகளில் பல்வேறு நிறங்களில் கயிறு விற்பதை பார்த்து இருப்போம். இந்தக் கயிறை நாம் வாங்கி கொண்டு அதனை அங்கு தெய்வங்களின் திருப் பாதத்தில் வைத்து நமக்கு அதே கயிறை மீண்டும் தருவார்கள் . அந்த தெய்வத்தின் ஆசியோடு நம் கைகளில் கட்டுவோம் . இதனை ரக்க்ஷை என்று கூறுவார்கள். அந்த கயிறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டிக்க கொள்ளலாம்.

இப்படி நம்மில் பலரும் கையில் கயிறுகளை கட்டுவதை பார்த்து இருப்போம். இடுப்பில் கட்டப்படும் கயிறை அரை ஞான் கயிறு என்று சொல்லுவார்கள். சிறு குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டி இருப்பார்கள். அதே போன்று கையில், கழுத்தில் ,காலில் என்று உடலின் பல உறுப்புகளில் கயிறு கட்டி இருப்பதையும் பார்த்து இருப்போம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கயிறை கட்டி இருப்பார்கள். நாமும் அதே போன்று கயிறு கட்டலாமா என்று கேட்டால் ? ஒரு சிலர் அவர்களின் ஜாதகத்தின் படி அவர்களுக்கு நடக்கக்கூடிய திசை மற்றும் புத்தியின் அடிப்படையில் கயிறுகளை காட்டுவார்கள். ஒரு சிலர் கண் திருஷ்டிக்காக கயிறு கட்டி இருப்பார்கள்.

ஆக திருஷ்டிக்காக கயிறு கட்டுபவர்கள் எனில் கருப்பு கயிறினை கழுத்தில் அல்லது மணிக்கட்டில் அல்லது காலில் கட்டிக்கொள்ளலாம். ஆனால் மற்ற வண்ணங்களில் இருக்கும் கயிரை கட்ட வேண்டுமானால், அவர்களின் ஜனன கால ஜாதகத்தை வைத்து நடப்பில் என்ன திசை நடக்கிறதோ அதனை அடிப்படையாகக் கொண்டு கயிறு கட்ட வேண்டும்.

இப்போது எந்த விதமான கயிறை நாம் கையில் கட்டக் கொள்ள வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சிகப்பு :

ஒருவரது ஜாதகத்தில் சூரிய திசை அல்லது சூரிய புத்தி நடக்கும் பொழுது சிவப்பு நிற கயிறை கட்டுவது நன்மையை பயக்கும். மேலும் இது சக்தியின் அருளை நமக்கு தந்து தீய சக்திகளிலிருந்து எப்போதும் நம்மை காக்கிறது. இதனை கையில் கட்டுவதால் திறமையாக,சுறுசுறுப்பாக செயல் பட முடியும்.

வெள்ளை:

ஜாதகத்தில் சந்திர திசை மற்றும் சுக்கிர திசை நடப்பவர்களுக்கு அல்லது சந்திர ?சுக்கிர புத்தி நடப்பவர்களுக்கு வெள்ளை நிறக் கயிறை கட்டுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இதனை கட்டுவதால் வாழ்க்கை பிரகாசமாக ஐதீகம்.

பச்சை:

புதன் திசை அல்லது புதன் புத்தி நடக்கும் போது இந்த கயிறை கட்ட சிறப்பை தரும். தவிர இந்த பச்சை நிறக் கயிறை கட்டுவதால் அவர்கள் எந்த ஒரு செயலையும் மிகச் சுலபமாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். தவிர பச்சை நிறக் கயிறை கட்டுவதால் குபேரனின் ஆசியும் பெற்று வாழ்வில் செல்வ செழிப்போடு வாழ்வீர்கள்.

மஞ்சள் :

குருவின் ஆசி பெற கயிறை அணிவது மிகச் சிறப்பாகும். குறிப்பாக படிக்கும் குழந்தைகளுக்கு மஞ்சள் நிறக் கயிறை கட்டுவதால் அவர்களது படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

கருப்பு:

சனி திசை அல்லது சனி புத்தி நடப்பவர்கள் இந்த கருப்பு கயிறை கட்டுவதால் சனியின் பாதிப்பு குறையும் என்ற நம்பிக்கை உண்டு. கண் திருஷ்டிக்காகவும் இதனை கட்டிக் கொள்ளலாம். இப்படி காட்டும் போது எவருடைய தீய சக்திகளும்,எதிரே மறை எண்ணங்களும் நம்மை அண்டாது என்று கூறப்படுகிறது.

எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கயிறை மாற்ற வேண்டும்:

எந்த விதமான கயிறறை கட்டினாலும் மாதத்திற்கு ஒரு முறை நிச்சயமாக மாற்ற வேண்டும். கட்டப்படும் கயிறில் அதிகப்படியான அழுக்கோ ,தூசியோ போன்று படிந்தால் அந்தக் கயிறின் மகத்துவத்தை இழந்து விடும். இப்படி மகத்துவம் இல்லாத கயிறை கட்டுவதால் எந்த ஒரு பயனும் ,நன்மையும்,கடவுளின் அனுகிரஹமும் நமக்கு கிடைக்காது.

இப்படியாக கயிறு கட்டுவதால் பல விதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இதனை நம்பியவர்கள் திருக்கோவில்களில் கிடைக்கும் கயிறை தெய்வங்களின் பத்தி வைத்து ரக்க்ஷை பெற்று கையில் கயிறு கட்டி வாழ்வில் முன்னேறுங்கள்.

லட்சுமி வாசம் செய்யும் வில்வ செடியை வீட்ல வளர்த்தால் இத்தனை பலன்களா?

Follow Us:
Download App:
  • android
  • ios