கிருஷ்ணரின் அருளை பெற 'நித்தாய் ரத யாத்திரை'.. சென்னையில் எங்கு நடைபெறுகிறது தெரியுமா?

அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் (iskcon) சார்பில் ஸ்ரீ ஸ்ரீ கெளர நித்தாய் ரத யாத்திரை, நாளை (ஏப்.14) சென்னை பெரம்பூரில்  நடைபெற உள்ளது.  

iskcon rath yatra 2023 sri gaur nitai ratha yatra festival date and place

இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் ஆகும். இது இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பரவி காணப்படுகிறது. இந்த இயக்கத்தை நீங்கள் அறியாமல் இருக்கலாம், ஆனால் இவர்களின் முழக்கத்தை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அதாவது "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா" என்பது இந்த இஸ்கான் இயக்கத்தின் முழக்கம் தான். இதை சொல்லாத கிருஷ்ணர் பக்தர்கள் இருக்க முடியுமோ! 

இந்த அமைப்பின் ஏற்பாட்டின் பேரில் பல  நாடுகளில் ரத யாத்திரை நடைபெறுவது வழக்கம். தற்போது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரத்தில் 'ஸ்ரீ ஸ்ரீ கெளர நித்தாய் ரத யாத்திரை' நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த எட்டு வருடங்களாக இந்த யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகளை எல்லாம் வட சென்னை பெரம்பூர் அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் கிளை முன்னின்று நடத்துகிறது.  

ஸ்ரீ ஸ்ரீ கெளர நித்தாய் ரத யாத்திரை நாளை பிற்பகல் 3 மணிக்கு பெரம்பூர் பாரதி சாலையில் தொடங்குகிறது. பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக கிருஷ்ணர் புகழ் பாடியபடியே, பேப்பர் மில்ஸ் சாலை, ரெட்டேரி சிக்னல், ரெட்ஹில்ஸ் சாலை வழியாக யாத்திரை செல்வார்கள்.  கிட்டத்தட்ட 2.30 மணி நேரத்தில் லட்சுமி புரம் பத்ம ஸ்ரீ சேஷ மஹாலுக்கு செல்வது தான் யாத்திரையின் திட்டம். 

Iskcon Rath Yatra 2023

இதையும் படிங்க: சனி சந்திர சேர்க்கையால் உண்டாகும் விஷம யோகம்! இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! மீறினால் இத்தனை பிரச்சனை?

இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக, ரதம்  இழுப்பதும், கீர்த்தனைகள் உச்சரிப்பதும் இடம்பெறும். பக்தி பரவசமாக பக்தர்கள் ரத யாத்திரையில் பங்கேற்பார்கள், அதற்கேற்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதக இஸ்கான் அமைப்பு தகவல் கூறியுள்ளது.  யாத்திரை மண்டபத்தை அடைந்த பின்னர் கிருஷ்ணன், ராதாவிற்கு சிறப்பு வழிபாடு செய்யப்படும். பானு சுவாமி மகராஜ் அவர்களின் மிகச்சிறந்த சொற்பொழிவை பக்தர்கள் கேட்டு பலனடையலாம். யாத்திரைக்கு நடுவில் பிரசாதம் கொடுக்கப்படும்.  கிருஷ்ணரின் அருளை பெற நித்தாய் ரத யாத்திரையில் கலந்து கொள்ளுங்கள். அதிகபட்ச தகவல்களுக்கு 9840087057 என்ற எண்ணை அழைக்கலாம். 

இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு அன்று சித்திரை கனியை காண்பது எப்படி? என்ன பொருள் வாங்கினால் வீட்டில் செல்வம் குவியும்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios