Asianet News TamilAsianet News Tamil

உப்புடன் 4 கிராம்பு போட்டு வைத்தால்.. அதுவும் வீட்டின் இந்த இடத்தில் வைத்தால், பணம் அதிகம் குவியுமாம்!!

உப்புடன் 4 கிராம்புகளை போட்டு வீட்டில் வைப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். அதை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

how to use salt to attract money
Author
First Published Apr 13, 2023, 6:26 PM IST | Last Updated Apr 14, 2023, 1:59 PM IST

Vastu Tips In Tamil: நாம் கஷ்டப்பட்டு உழைக்கும் காசு வீட்டில் தங்காமல் போனால் எவ்வளவு வேதனை அளிக்கும். வீட்டில் பணம் நிலைத்தால் தானே நமக்கு மனக்கவலை இல்லாமல் இருக்கும். கெட்ட கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல், பணக்கஷ்டம் எல்லாம் நம் நிம்மதியை கெடுக்கும் விஷயங்கள். வீட்டில் நேர்மறை ஆற்றல் தங்குவதோடு பணமும் நிலைத்திருக்க உப்பை கொண்டு சில சடங்குகளை செய்தாலே போதும். 

செலவுகள் குறைய! 

வீட்டிற்கு பணம் வந்த வேகத்தில் உடனே செலவாகி விடுகிறதா? இப்படிப்பட்ட பிரச்சனையை சந்திப்பவர்கள் வீட்டின் மூலைகளில் கொஞ்சம் கல் உப்பை வைத்து விடுங்கள். இதனால் பண செலவை தூண்டும் துர்சக்திகள் விலகும். வீட்டில் நடுப்பகுதியில் 1 கைப்பிடி கல் உப்பை, கண்ணாடி கிண்ணத்தில் போட்டு வைத்தால் செல்வம் பெருகும். இப்படி கண்ணாடி கிண்ணத்தில் வைக்கும் உப்பை 10 தினங்களுக்கு ஒரு முறை மாற்றி வைக்க வேண்டும். 

பர்ஸில் பணம் குறையாமல் இருக்க! 

உங்களுடைய பர்ஸில் பணம் சேர இதை செய்யுங்கள். ஒரு குட்டி பிளாஸ்டிக் பையில் 1 டீஸ்பூன் கல் உப்பு போட்டு அந்த பையை பர்ஸில் ரகசியமாக வைக்க வேண்டும். அதை யாரும் பார்க்கக் கூடாது. இந்த உப்பையும் 10 தினங்களுக்கு 1 முறை மாற்ற வேண்டும். இதனால் பர்ஸில் பணம் சேரும் என்பது ஐதீகம். 

how to use salt to attract money

இதையும் படிங்க: வீட்டில் பணம் தங்கவில்லையா? நிலைவாசலில் இப்படி குங்குமப் பொட்டு வைத்தால், வற்றாத செல்வம் வீட்டில் சேரும்!

மாதம் முழுக்க பண வரவு!! 

மாதம் முழுக்க உங்களுடைய கையில் பணம் புரள வேண்டும் என்றால், ஞாயிற்றுக்கிழமை உப்பு பரிகாரத்தை செய்யலாம். மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமை தான் ஏற்றது. கண்ணாடி டம்ளரில் 3இல் ஒரு பகுதி உப்பை எடுத்து, அந்த அளவில் நீரை ஊற்றி கொள்ளுங்கள். 1 மணிநேரம் அப்படியே வைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த நீரால் கைகளை கழுவி கொள்ளுங்கள். இதை செய்யும்போது பணம் எப்போதும் கையில் நிலைக்க வேண்டும் என்பதை மனதில் நினைத்து கொள்ள வேண்டும். அவசியமில்லாத செலவுகளை செய்யவே கூடாது என்றும் நினைப்பதும் அவசியம். குறிப்பாக தோட்டம் அல்லது பூந்தொட்டியில் கை கழுவ வேண்டும். கை கழுவிய பிறகு கரங்களை 3 முறை தட்டி கொள்ளுங்கள். முதல் ஞாயிற்றுக்கிழமையில் எந்த நேரமும் இதை செய்யலாம். 

வற்றாத பணவரவிற்கு வீட்டில் உப்பு, கிராம்பு பரிகாரம் செய்யலாம். ஒரு கண்ணாடி கிண்ணம் அல்லது டம்ளர் எடுத்து கொள்ளுங்கள். அதில் 4 முதல் 5 கிராம்பை சொருக வேண்டும். அதனுடன் கல் உப்பை போட்டு, உங்களுடைய வீட்டின் எந்த மூலையிலும் வைத்து கொள்ளலாம். இப்படி செய்வதால் வீட்டில் பணம் அதிகமாக வரும். வீட்டை ஆட்டிப்படைக்கும் எதிர்மறை ஆற்றல் முழுவதும் நீங்கி, வீட்டில் நேர்மறை ஆற்றல் பொங்கி வழியும். 

இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு 2023 : வழிபாடு செய்ய நல்ல நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios