Fenugreek: தோஷம் நீங்குவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்; செஞ்சுதான் பாருங்களேன்!!
தோஷம் பிறந்த ஓவ்வொருவரையும் ஏதாவது ஒரு வகையில் தாக்கும் என்று கூறப்படுவது உண்டு. பிறந்த குழந்தைக்கு இந்த தோஷம் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
தோஷம் என்பதை தீட்டு என்றும் கூறலாம். சிலருக்கு இறந்தவர்களின் வீட்டில் சாப்பிட்டால் சேராது. தோஷம் என்று கூறுவார்கள். பிறந்த குழந்தையை, தீட்டு இருக்கும் பெண்கள் தொட்டால் தோஷம் என்று கூறுவார்கள். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை இங்கே குறிப்பிடவில்லை. உலக நடப்பை வைத்து குறிப்பிடுகிறோம். பெரும்பாலான வீடுகளில் இன்றும் தீட்டான பெண்களை பூஜை அறைக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
குழந்தை பிறந்த பின்னர் இதனால்தான் பல வீடுகளிலும் சுத்திப்போடுவது, சூடம் சுற்றுவது, மஞ்சள் தண்ணீரில் சுண்ணாம்பு, வெற்றிலை போட்டு சுற்றுவது என்று செய்வார்கள். சிலர் தீபம் சுற்றுவார்கள். சிலர் உப்பு, கடுகு, சிறிய வெள்ளைத்துணி, காய்ந்த மிளகாய் கலந்து சுற்றி விடுவார்கள் அல்லது எரிப்பார்கள். இப்படி பல்வேறு வழக்கங்கள், நடைமுறைகள் உள்ளன.
ஒரே ஒரு பொருள் போதும்.. நகை பெட்டியில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்..
தோஷம் ஏற்படுகிறது என்பதற்காக நாம் பெரிய அளவிலான பரிகாரங்களை எல்லாம் செய்ய வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே செய்யலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் வெந்தயம் எடுத்துக் கொள்ளுங்கள். இதை சமையலறையில் உப்பு டப்பா அருகில் வைத்து விடவும். இதை மூடி வைக்கக் கூடாது. திறந்துதான் வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை இந்த வெந்தயத்தை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, வேறு வெந்தயம் நிரப்பி வைக்க வேண்டும்.
உங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கலாம். ஏன் சமையலையில் வைக்கக் கூறுகிறார்கள் என்று. ஆம், சமையலறை தான் குடும்பத்தின் ஆரோக்கியத்தை காப்பாற்றுகிறது. ஆரோக்கியம் கொடுக்கிறது. அங்கு வெந்தயத்தை திறந்து வைப்பதன் மூலம ஒட்டு மொத்த குடும்பத்தின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
மறந்தும் கூட இந்த பொருட்களை வீட்டின் பூஜை அறையில் வைக்காதீங்க....அது பிரச்சனைக்கு அழைப்பாகும்..!!