Asianet News TamilAsianet News Tamil

வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் ஏன் தொங்கவிடுகிறோம் தெரியுமா..? மதம் மற்றும் அறிவியல் காரணங்கள் இதோ..

எலுமிச்சம்பழம் மற்றும் மிளகாயை ஏன் எப்போதும் வீட்டின் முன் தொங்க விடுகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதைப் பற்றி பல நம்பிக்கைகள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம். 

here reasons behind why do we hanging lemon and chillies at the entrance in tamil mks
Author
First Published Jan 20, 2024, 10:23 AM IST

நம் நாட்டில் மக்கள் தங்கள் விருப்பதிற்கு ஏற்ப பல்வேறு மதங்களை பின்பற்றுகின்றன. ஒருபுறம் பல வகையான மதங்கள் மற்றும் வேதங்கள் இருந்தாலும், மறுபுறம் அவற்றுடன் தொடர்புடைய பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் சில பழக்கவழக்கங்கள் கூட உள்ளன  ஆனால் அந்த பழக்கவழக்கங்களை நாம் ஏன் பின்பற்றி வருகிறோம் என்றி எந்த கேள்வியும் எழுப்பவில்லை. இப்படிப்பட்ட பழக்கவழக்கங்கள் ஏன் இவ்வளவு காலமாக நடந்து வருகிறது என்பது கூட நமக்குத் தெரியாது.

அந்தவகையில், இந்து மதத்தில் பல்வேறு வகையான விஷயங்கள் நம்பப்படுகின்றன. பலர் அதை உண்மை என்று நம்பினாலும், சிலர் அது மூடநம்பிக்கை என்று கருதுகிறார்கள். அவற்றில் ஒன்று தான் எலுமிச்சை மற்றும் மிளகாயை வீட்டின் முன் தொங்க விடுவது. புதிய காரில், வீட்டில், கடையில் அல்லது புதிய வணிக இடத்தில் எலுமிச்சை மற்றும் மிளகாய் தொங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது தீய கண்களை ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது, ஆனால் எலுமிச்சை மற்றும் மிளகாய் மட்டும் ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? இதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

எலுமிச்சை மிளகாயுடன் தொடர்புடைய மதக் காரணம் என்ன?
நம்பிக்கைகளின்படி, செல்வத்தின் தேவி லக்ஷ்மிக்கு ஒரு சகோதரி இருக்கிறார், அவர் பெயர் அனலட்சுமி. லக்ஷ்மி மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் சின்னமாக இருந்தாலும், சோகமும் வறுமையும் அனலக்ஷ்மியுடன் தொடர்புடையது. லட்சுமிக்கு இனிப்பு மற்றும் மணம் நிறைந்த உணவுகள் பிடிக்கும். ஆனால் அவரது சகோதரிக்கு புளிப்பு மற்றும் காரமான உணவுகளை மட்டுமே விரும்புகிறாள். எனவே, லட்சுமி தேவி வீட்டிற்கு வெளியில் இருந்து திருப்தி அடைவதற்காகவும், அவரது சகோதரியான அனலட்சுமி வீட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காகவும் மக்கள் வீட்டிற்கு வெளியே எலுமிச்சை மற்றும் மிளகாயை தொங்கவிடுகிறார்கள்.

இதையும் படிங்க:  புதிய வாகனத்தின் டயருக்கு அடியில் எலுமிச்சை வைக்கப்பது ஏன் தெரியுமா..?

அறிவியல் காரணம்:
இதற்கு பயணம் தொடர்பான ஒரு கோட்பாடு உள்ளது. அது என்னவென்றால், பழங்காலத்தில் மக்கள் காடுகளின் வழியாக நடந்தே செல்வார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் தங்களுடன் 
எலுமிச்சம்பழம், மிளகாயை எடுத்துச் செல்வது வழக்கம். ஏனெனில், சோர்வு ஏற்பட்டால் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்..மேலும், நடந்து செல்லும் போது பாம்பு கடித்தால், மிளகாயை சாப்பிட்டு பாம்பு விஷமா இல்லையா என்பதை வைத்து சரிபார்க்கலாம். அது எப்படியென்றால், மிளகாய் காரமாக இருந்தால், பாம்பு கடித்ததில் எந்த பிரச்சினையும் இல்லை என்று அர்த்தம். ஒருவேளை மிளகாயில் எந்தவொரு சுவையும் தெரியவில்லையென்றால், பாம்பின் விஷம் உடலில் கலந்துவிட்டது என்று அர்த்தம்.

இதையும் படிங்க:  காளி அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவிப்பது ஏன் தெரியுமா?

இயற்கை பூச்சிக்கொல்லி:
எலுமிச்சை மற்றும் மிளகாய்க்கு இயற்கை பூச்சிக்கொல்லி போன்ற பண்புகள் இருப்பதால் அவை வீட்டிற்கு வெளியே தொங்கவிடப்படுகின்றன.  கொசுக்கள், ஈக்கள், பூச்சிகள் போன்றவற்றை வீட்டிற்குள் வராமல் தடுக்க எலுமிச்சை மிளகாய் உதவுகிறது. அதனால்தான், எலுமிச்சை மற்றும் மிளகாயை வீட்டுக்கு வெளியே தொங்கவிடுவது வழக்கம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எதிர்மறை ஆற்றலை விரட்டும்:
இது தவிர, வீட்டில் எலுமிச்சை மிளகாயைத் தொங்கவிடுவது எந்த வகையான எதிர்மறை ஆற்றலையும் விரட்டும் என்று நம்பப்படுகிறது.  இதனால்தான் இதை தீய கண்களுடன் தொடர்புடையது என்று கூறுகின்றனர். மேலும் பலர் இந்த வழக்கத்தை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துகின்றனர். சிலர் 5 மிளகாய் மற்றும் ஒரு எலுமிச்சையை தொங்கவிடுகின்றனர், சிலர் 7 மிளகாய் அல்லது 3 எலுமிச்சையை பயன்படுத்துகின்றனர். மக்களின் நம்பிக்கைகள் வேறுபட்டிருக்கலாம், அவற்றுடன் தொடர்புடைய பழக்கவழக்கங்களும் வேறுபட்டிருக்கலாம் என்று இதன் மூலம் நீங்கள் அறிந்திருக்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios