அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா! எப்படி போவது..? எங்கு தங்கலாம்..?? முழு விவரம் இதோ!

இத்தொகுப்பில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ரயில் மூலம் எப்படி செல்வது? தேதி, நேரம் போன்ற தகவல்களை குறித்து இங்கு படித்துதெரிந்து கொள்ளுங்கள்..

here  kanyakumari to ayodhya train details for ayodhya ram temple inauguration in tamil mks

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் 22 ஜனவரி 2024 அன்று திறக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தான் ராமர் கோவிலை திறந்து வைக்கிறார். 

கோவில் திறக்கப்பட்ட உடன் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் வழங்கப்படும். அன்றைய தினம் காலை 7 மணி முதல் 11.30 மணி வரை பக்தர்கள் ராமரை தரிசனம் செய்யலாம். அதன்பிறகு, இரண்டரை மணி நேரம் கோவில் மூடப்பட்டிருக்கும். பிறகு மதியம் 2 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர் கோயிலின் நடை சாத்தப்படும். ஒருவேளை உங்களால் ராமரை அன்று பார்க்க முடியவில்லை என்றால் மறுநாள் காலை ராமரை தரிசிக்கலாம்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ராமரை தரிசிக்க அயோதிக்கு ரயிலில் எப்படி போவது? ரயிலின் நேரம், தேதி மற்றும் அங்கு தங்குமிடம் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

இதையும் படிங்க: அயோத்தி.. வண்ண விளக்குகளால் ஒளிரும் ராமர் கோவில் - ராம் ஜென்மபூமி அறக்கட்டளை வெளியிட்ட வீடியோ வைரல்! 

தமிழ்நாட்டில் இருந்து அயோத்திக்கு செல்லக்கூடிய ரயில் விவரங்கள்:

1. கன்னியாகுமரி முதல் நிஜாமுதீன் (12641) "திருக்குறள் அதிவிரைவு ரயில்"
19.01.2024 அன்று கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக வீரங்கான லக்ஷ்மி பாய் ஜான்சி ஸ்டேஷனுக்கு 21.01.2024 அன்று வந்தடையும். இங்கிருந்து அயோத்திக்கு செல்ல நேரடி ரயில் உள்ளது. 

2. அகமபாத்தில் இருந்து வரும் சமர்தி எக்ஸ்பிரஸ் (19167) 21.01.2024 மாலை 5.45 ஜான்சி ஸ்டேஷனுக்கு வரும். பிறகு அயோத்தி ஜங்ஷனுக்கு 22.01.2024 அதிகாலை 4.30 மணிக்கு சென்றடையும்.

இதையும் படிங்க: மாலை பொழுதை ரம்யமாக்கும் அயோத்தி ராமர் கோவில்.. வெளியான பிரம்மிக்கவைக்கும் போட்டோஸ் - இதோ உங்களுக்காக!

தங்குமிடம்: 
அயோத்திக்கு சென்றவுடன் நீங்கள் அங்கு 'நாட்டுக்கோட்டை சத்திரம்' என்ற இடத்தில் தங்கலாம். நீங்கள் இந்த இடத்தில் தங்கும்போது உங்களுக்கு தேவையான உணவு இங்கு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்காக 7311166233 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் தங்கும் இந்த இடத்தில் தமிழ் பேசுபவர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios