Happy Vinayagar Chaturthi 2023 : உச்சிப் பிள்ளையாருக்கு இன்று 150 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கொழுக்கட்டை..!
இன்று உச்சிப் பிள்ளையார் கோவிலில் 150 கிலோ எடை உள்ள பிரம்மாண்டமான கொழுக்கட்டை விநாயகருக்கு படையலிடப்பட்டது.
விநாயகப் பெருமானை போற்றும் வகையில், நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டுகிறது. இந்நாளில், விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் படி, திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்றும் 14 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். அந்தவகையில், இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி இன்று (செப்.18) முதல் தொடங்கி 1, அக்டோபர் வரை நடைபெறும்.
நிவேத்தியமாக 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை:
இந்நிலையில், மலைக்கோட்டை வாசலில் இருக்கும் மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ மற்றும் மலை உச்சியில் இருக்கும் விநாயகருக்கு 75 கிலோ என்ற வீதம் கணக்கில் இருவருக்கும், இந்த விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 150 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான கொழுக்கட்டை இன்று (செப்.18) காலை படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: விநாயக சதுர்த்தி அன்று 300 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் மங்களகரமான யோகம்...இந்த 3 ராசிக்கு ஜாக்பாட்!!
பிரசாதம்:
பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு இந்த கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. இது கடந்த இரண்டு நாட்களாக திருக்கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது. இந்த கொழுக்கட்டையானது விநாயகருக்கு படையல் இட்ட பின், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த கோவிலில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டும் இப்படி 150 கிலோ எடை உள்ள கொழுக்கட்டை செய்து அதை விநாயகருக்கு படையலிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Happy Vinayagar Chaturthi : விநாயக சதுர்த்தி அன்று இந்த மந்திரங்களை உச்சரியுங்க..அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..!!
கொண்டாட்டங்கள்:
உச்சிப் பிள்ளையார், மாணிக்க விநாயகர் ஆகிய இருவருக்கும் 14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். மேலும் மாலை நேரத்தில் இங்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதுபோல் ஒவ்வொரு நாளும் இந்நாட்களில் மாலை 4 மணிக்கு விநாயகர் பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.