இன்று சூரிய கிரகணம்.    இந்த ஆண்டின் கடைசி  சூரிய கிரகணம். இன்று மதியம் 2.28 க்கு தொடங்கி மாலை 6.32க்கு முடிகிறது. மாலை 4.29 க்கு உச்சத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.  இன்றைய தினத்தில் கோவில்கள்  மற்றும் வீடுகளில் தெய்வ சடங்குகள் நிறுத்தி வைக்கப்படும்.  மாலை 6.32 க்கு பிறகு புனித நீராடுதலுக்கு பிறகு  இவை அனைத்தும் தொடங்கப்படும். இந்த முக்கியமான நிகழ்வில் செய்ய வேண்டியது என்ன செய்ய கூடாதது என்ன தெரிந்துகொள்வோம். 

சூரிய கிரகணம் என்றால் என்ன

சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும் போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வு. இந்த நிகழ்வில் சூரியன் முழுமையாக மூடப்பட்டிருக்கும் கதிர்கள் பூமியை வந்தடையாது. இது புராண மற்றும் ஜோதிடத்துடன் தொடர்புடையது.

பாரம்பரியமாகவே இந்தியாவில் காலங்காலமாக பின்பற்றப்படும் விதிகள் பல உள்ளன. அது குறித்து பார்க்கலாம்.

கிரகணத்தின் போது

கிரகணம் பிடிக்கும் நேரத்தில் பொருள்களின் மீது தர்ப்பையை போடுவது மரபு. தர்ப்பை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. அதனால் உணவு பொருள்களில் அதை போடுவது வழக்கம். 

கிரகண நேரத்தில் வீட்டுக்கு வெளியில் செல்ல கூடாது. கிரகணம் முடிந்த பிறகு வெளியே செல்ல வேண்டும். இன்றைய தினத்தில் இன்றைய தினத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யகூடாது என்பதை பார்க்கலாம். 

கிரகணத்தின் போது செய்ய கூடாதவை

சூரிய கிரகணத்தின் போது எந்த வேலையும் செய்ய வேண்டாம்.
சூரிய கிரகணத்தின் போது சூரியனை நேரடியாக பார்க்க கூடாது. சூரியனை வெறும் கண்களால் பார்க்க கூடாது. 
கிரகணத்தின் போது சமைக்கவோ சாப்பிடவோ கூடாது.
கிரகணத்தின் போதும் கிரகணத்துக்கு பின்னரும் வெளியே போக கூடாது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவோ போகவோ கூடாது. 
உணவு மீதியிருந்தால் அதில் தர்ப்பை போட்டு வைக்கவும். 
தண்ணீரில் தர்ப்பை போட்டு வைக்கவும்.
கிரகண நேரத்தில் தூங்க கூடாது. 
சூரிய ஒளி வீட்டுக்குள் நுழையக்கூடாது. கதவுகளில் திரைச்சீலை இருந்தால் அதை கொண்டு மூடி விடவும் . கதவுகளை திறந்து வைக்க வேண்டாம்.

Solar Eclipse 2022: இன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணம்..யாருக்கு மிகவும் மோசமானது..? முழு விவரம் உள்ளே..!

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை

சூரிய கிரகணத்துக்கு முன்னும் பின்னும் குளிக்கவும்.
கிரகணத்துக்கு குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்பு உணவு எடுத்துகொள்ளுங்கள்.
 சூரிய கிரகணத்தின் போது தியானம் செய்யுங்கள். சிவன், குரு மற்றும் விஷ்ணுவின் துதிகளை பாடுங்கள்.
கிரகணத்துக்கு முன்பு தர்ப்பை புல்லை உணவில் போடுங்கள். 
கிரகணத்துக்கு முன்பு உணவு இருந்தால் அதை வெளியேற்றிவிடவேண்டும்.
குடிநீரில் தர்ப்பை போடுங்கள்.
வீட்டை சுற்றி கங்கா நீர் இருந்தால் தெளித்துவிடுங்கள். அது வீட்டில் நேர்மறையை அளிக்கிறது. மேலும் கிரகணத்தின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது. 
கிரகணம் முடிந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து துடைத்து, பூஜை பொருள்களை சுத்தம் செய்து பிறகு விளக்கேற்றி வழிபடவும்.