Asianet News TamilAsianet News Tamil

Karthigai Deepam 2023 : கார்த்திகை தீபத்திற்கு என்ன செய்ய வேண்டும்? எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் தெரியுமா?

உலகம் முழுவதும் நவம்பர் 26ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்களை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

do you know what to do on karthigai deepam festival 2023 in tamil mks
Author
First Published Nov 23, 2023, 4:18 PM IST | Last Updated Nov 26, 2023, 6:37 AM IST

இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் பிற பண்டிகையைப் போன்று "கார்த்திகை தீபத்திருநாள்" மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்நாளில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி சிவனை வழிபடுவது வழக்கம். இந்நாளில், 'திருவண்ணாமலை தீபம்' மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுபோல் இந்நாளில், அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் 'மகாதீபம்' ஏற்றப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தீபம் ஏற்றப்படும். இன்னும் சொல்லப்போனால், திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு தான் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவர்.

இதையும் படிங்க;- கார்த்திகை தீபம் 2023 : தவறுதலாக கூட இந்த முறையில் தீபம் ஏற்றாதீர்கள்.. மோசமான இழப்பு நேரிடலாம்!

கார்த்திகை தீபம் 2023 எப்போது?

தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் தான் 'கார்த்திகை தீபம்' கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு, கார்த்திகை தீபத்திருநாளானது, ஆங்கிலம் மாதமான நவம்பர் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்படவுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சன்னதியில் நவம்பர் 26ஆம் தேதி அன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். அதே நாளில் மாலை 6 மணிக்கு வேளையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். 

இதையும் படிங்க;- "பரணி தீபம்‌" ஏன்.. எப்போது.? அதன் பலன்கள் மற்றும் முறை இதோ!  

இந்நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் என்ன செய்ய வேண்டும்?

இந்த தீபத்திருநாளில் மக்கள் தங்கள் வீட்டு வாசல் முன் கட்டாயம் புதிய விளக்குகளை வைக்க வேண்டும். மற்ற இடங்களில் பழைய விளக்குகளை வைக்கலாம். அதுபோல் விளக்குகளை முதல் நாளே சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். அந்நாளில் விளக்கில் சுத்தமான எண்ணெய் ஊற்றி தான் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் அல்லது நெய் ஆகியவை மட்டுமே அதில் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.

இதையும் படிங்க;- Karthigai Deepam 2023 : கார்த்திகை மாதம் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது பலன் தருமா?

விளக்கு ஏற்ற சரியான திசை எது?

  • கார்த்திகை தீபம் அன்று கிழக்கு திசையில் விளக்கு ஏற்றினால் கஷ்டங்கள் நீங்கும்.
  • மேற்கு திசையில் விளக்கு ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
  • வடக்கு திசையில் விளக்கு ஏற்றினால் திருமணத்தடை நீங்கும். 

இதையும் படிங்க:  "பரணி தீபம்‌" ஏன்.. எப்போது.? அதன் பலன்கள் மற்றும் முறை இதோ!

இந்த திசையில் ஏற்ற கூடாது:

கார்த்திகை தீபத்திருநாளன்று, தெற்கு திசை நோக்கி மட்டும் விளக்கு ஏற்றவேக் கூடாது. அது மிகவும் தவறு. 

இதையும் படிங்க:   திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2023: தீபம் ஏற்றும் நேரம், தேதி மற்றும் பிற விபரங்கள் இதோ..!

எத்தனை முகம் தீபம் ஏற்றினால் நல்லது:

  • ஒரு முகம் தீபம் ஏற்றினால் நீங்கள் நினைத்த காரியங்கள் கண்டிப்பாக நிறைவேறும்.
  • இரண்டு முகம் தீபம் ஏற்றினால் உங்கள் குடும்பத்தில் நன்மைகள் பல கிடைக்கும்.
  • மூன்று முகம் தீபம் ஏற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • நான்கு முகம் தீபம் ஏற்றினால் உங்களுக்கு செல்வம் பெருகும். 
  • ஜந்து முகம் தீபம் ஏற்றினால் சகல நன்மைகள் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கார்த்திகை தீபம் அன்று எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் தெரியுமா?

இந்த கார்த்திகை தீபத்திருநாளன்று, 27 விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும். ஏனெனில், 27 என்பது  27 நட்சத்திரங்களைக் குறிக்கிறதாம். ஒருவேளை உங்களால் 27 விளக்குகள் வைக்க முடியவில்லையென்றால், 9 விளக்குகள் ஏற்றலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios